TN Headlines Today:
90-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மேட்டூர் அணை
தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளின் தாயாக விளங்கும் மேட்டூர் அணை இன்று தனது 89 ஆண்டுகள் நிறைவு பெற்று 90வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. மேட்டூர் அணையானது 1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு இன்ஜினியராக கர்னல் W.L. எல்லீஸ் தலைமையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் அணை கட்ட தொடங்கினர். அணையின் கட்டுமான பணி சுமார் 9 ஆண்டுகள் நடைபெற்றது. பின்னர் 1934 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி மேட்டூர் அணை கட்டுமான பணி முழுமையாக நிறைவடைந்தது. மேட்டூர் அணை கட்டுவதற்கான செலவு தொகை ரூபாய் 4 கோடியே 80 லட்சம் ஆகும். இதைத்தொடர்ந்து 1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி அப்போதைய ஆங்கில ஆட்சியில் சென்னை உயர்வான கர்ணனாக இருந்த சர் ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி அணையைத் முதன் முறையாக திறந்து வைத்தார்.மேலும் வாசிக்க..
மகனை அடித்துக் கொன்ற தாய்...! சென்னையில் நடந்தேறிய பகீர் சம்பவம்..!
மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூவரசன், மற்றும் செல்வி இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பூவரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியிடம் விசாரித்து வந்தனர். செல்வியிடம் மதுரவாயில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கடுமையான மன அழுத்தத்தில் இருந்த செல்வியே தனது மகன் பூவரசனை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துவிட்டு தன்னையும் தாக்கி கொண்டது தெரியவந்தது. மேலும் வாசிக்க.
அதிக கேள்வி கேட்கும் குழந்தைகளே அறிவு நிறைந்த குழந்தைகள்
கர்மயோகி காமராஜர் கல்வி அறக்கட்டளை சார்பில் மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்கள் பயன்பாட்டிற்காக பயிற்சி வகுப்பு, தளவாடங்கள் வாங்குவதற்காக நடப்பு 2023 - ம் ஆண்டிற்கான பங்களிப்பு நன்கொடை தொகையாக ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை பொது நூலகத் துணை இயக்குனரிடம் அறக்கட்டளை தலைவர் குணசேகரன் வழங்கினார். தென்னிலை காவல் நிலைய நூலகத்திற்கு கரூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் நன்கொடையாக ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான நூல்கள் வழங்கப்பட்டன. ஆத்யா ஹோம் மேலாண்மை இயக்குனர் நகுல்சாமி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியை முரளி தொகுத்து வழங்கினார். வாசகர் வட்ட தலைவர் தீபம் சங்கர் வரவேற்றார். மாவட்ட மைய நூலக நூலகர் மேரிரோசரி சாந்தி நன்றி கூறினார். திரளான வாசகர்கள், மாணவர்கள், நூலகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மேலும் வாசிக்க..
உழவர்களின் தந்தை மேட்டூர் அணைக்கு பிறந்தநாள் - ராமதாஸ் வாழ்த்து
மேட்டூர் அணையின் 90 வது பிறந்தநாளுக்கு பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் ட்விட்டர் கணக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், காவிரி பாசன மாவட்டங்களின் வேளாண்மைக்கு தண்ணீர் வழங்கும் காவிரி ஆறு உழவர்களின் தாய் என்றால், காவிரியில் வெள்ளம் போல வரும் தண்ணீரை தேக்கி வைத்து தேவைக்கு ஏற்ப வழங்கும் மேட்டூர் அணை தான் உழவர்களின் தந்தை. அந்த உழவர்களின் தந்தைக்கு இன்று 90-ஆம் பிறந்தநாள். 1924-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மேட்டூர் அணையின் கட்டுமானப் பணிகள் 1934-ஆம் ஆண்டில் நிறைவடைந்து அந்த ஆண்டின் ஆகஸ்ட் 21-ஆம் நாள் தான் அணை திறக்கப்பட்டது. 89 ஆண்டுகளாக காவிரி பாசன மாவட்டங்களை செழிக்கச் செய்து கொண்டிருக்கும் மேட்டூர் அணைக்கு அதன் பிறந்தநாளில் வாழ்த்துகளுடன் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் வாசிக்க..
டெல்லியில் பிரதமர் வீடு முன் போராடலாம் வாங்க.
நீட் தேர்விற்கு எதிராக டெல்லியில் போராட அதிமுக முன்வர வேண்டும் என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்படுவதாக ஆளுநரை கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் (மதுரை தவிர) நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். போராட்டத்தின் இறுதியில் பேசிய அவர், மத்திய அரசு, பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.மேலும் வாசிக்க
எழும் கடும் எதிர்ப்பு.. மறுபுறம் நீட் தேர்வுக்கு குவியும் விண்ணப்பங்கள், தேசிய அளவில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில்?
மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்த மாநில பாடத்திட்ட மாணவர்களில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளது.மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாட்டில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் கூட நீட் விவகாரத்தில் ஜெகதீஸ்வரன் எனும் மாணவன் மற்றும் அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டனர். அதோடு, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழ்நாடு அரசின் மசோதாவில் கையெழுத்தே போடமாட்டேன் என ஆளுநரும் கூறியிருந்தார். ஆளுநரின் பேச்சை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் நேற்று கூட திமுக சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் வெளியாகியுள்ள நீட் தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் வாசிக்க..
நாளை 11 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை..
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 21.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வாசிக்க..
6-வது சக்தி மசாலா சுயசக்தி விருதுகள்..
பெரியார் சொன்ன பெண் விடுதலை தான் திராவிட மாடல் அரசின் நோக்கம்" என்று கூறிய தயாநிதிமாறன் சக்தி மசாலாவின் சுயசக்தி விருதுகள், பெண்களுக்கு அந்த தன்னம்பிக்கை அளித்துள்ளது என்று பாராட்டி உள்ளார். இந்த விழாவில் சிறந்த பெண் ஆளுமைக்கான சக்தி பெண் விருது நடிகை ரேவதிக்கு சுஹாசினி மணிரத்தினம் வழங்கினார். சென்னை, சேத்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் அரங்கத்தில் சக்தி மசாலாவின் 6-வது சுயசக்தி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இல்லத்தில் இருந்தபடியே தொழில்துறையில் சாதனை படைத்த பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.மேலும் வாசிக்க..