கரூர் மாவட்ட பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் 48வது சிந்தனை முற்றம் மற்றும் நூலகர் தின விழா கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது.
கரூர் மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் முன்னிலை வகித்தார். சென்னை பொது நூலக இயக்க துணை இயக்குனர் இளங்கோ சந்திரகுமார் தலைமை வகித்து பேசியதாவது: அரசு திட்டங்கள் வாசகர்களுக்கும், மாணவர்களுக்கும் சென்றடைய நூல்களின் பணி முக்கியமானது. வாழ்க்கையில் முன்னேற நூலகத்தை பயன்படுத்த வேண்டும். சமீபத்திய தொழில்நுட்பங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நூலகர்கள் தங்களது கடமையை பொறுப்புணர்வுடன் பணியாற்றி நூலகத்துறைக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்றார்.
"ஈரம் கசியும் கதைகள்" என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா பேசியதாவது: ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளை கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும். எந்த குழந்தை அதிக கேள்விகள் கேட்கிறதோ? அக்குழந்தைகளே அறிவு நிறைந்த குழந்தையாக வளரும். குழந்தைகளுக்கு நல்ல கருத்துக்களை சொல்லித் தருவது புத்தகங்களை. நமது பண்டைய கிராமிய கல்வி முறையே, நார்வே, சுவீடன், டென்மார்க் போன்ற வடை ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகிறது. நமது சிறந்த தமிழ் கலாச்சாரங்களை உலகறியச் செய்ய வேண்டும் என்றார்.
கர்மயோகி காமராஜர் கல்வி அறக்கட்டளை சார்பில் மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்கள் பயன்பாட்டிற்காக பயிற்சி வகுப்பு, தளவாடங்கள் வாங்குவதற்காக நடப்பு 2023 - ம் ஆண்டிற்கான பங்களிப்பு நன்கொடை தொகையாக ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை பொது நூலகத் துணை இயக்குனரிடம் அறக்கட்டளை தலைவர் குணசேகரன் வழங்கினார். தென்னிலை காவல் நிலைய நூலகத்திற்கு கரூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் நன்கொடையாக ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான நூல்கள் வழங்கப்பட்டன. ஆத்யா ஹோம் மேலாண்மை இயக்குனர் நகுல்சாமி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியை முரளி தொகுத்து வழங்கினார். வாசகர் வட்ட தலைவர் தீபம் சங்கர் வரவேற்றார். மாவட்ட மைய நூலக நூலகர் மேரிரோசரி சாந்தி நன்றி கூறினார். திரளான வாசகர்கள், மாணவர்கள், நூலகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial