- TNPSC Group 1 Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு: பார்ப்பது எப்படி?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவைக்கு ஏற்ப குரூப் 1, 2, 3, 4 எனப் பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் படிக்க
- PM Modi TN Visit: மீண்டும் மீண்டுமா..! மார்ச் 22ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி - திட்டங்கள் என்ன?
நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 22ம் தேதி தமிழகம் வந்து, தென்மாவட்டங்களில் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4ம் தேதி தான் சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் படிக்க
- NEET Coaching: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25 முதல் மே 2 வரை நீட் பயிற்சி; 2 வேளை உணவு, பேருந்து கட்டணம் அளிப்பு!
2023- 24ஆம் கல்வியாண்டில் NEET போட்டித் தேர்விற்கு அரசுப் பள்ளி மாணவர்களை ஆயத்தப்படுத்த தொடர் பயிற்சி அளிப்பது தொடர்பாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2023-2024ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ/ மாணவிகளில் NEET போட்டித் தேர்விற்கு நுழைவுத் தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவ/ மாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆசிரியர்களைக் கொண்டு முதன்மைக்கல்வி அலுவலர் மேற்பார்வையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
- TN Weather Update: அதிகரிக்கும் வெயிலால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியம்.. வானிலை விடுக்கும் எச்சரிக்கை..
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை, மிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- Special Buses: சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களே..! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்..
தமிழ்நாடு அரசின் மாநில பேருந்து போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், அவ்வப்போது பண்டிகை காலம், சிறப்பு விடுப்புகள் போன்ற காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். மேலும் படிக்க