2023- 24ஆம் கல்வியாண்டில் NEET போட்டித் தேர்விற்கு அரசுப் பள்ளி மாணவர்களை ஆயத்தப்படுத்த தொடர் பயிற்சி அளிப்பது தொடர்பாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2023-2024ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ/ மாணவிகளில் NEET போட்டித் தேர்விற்கு நுழைவுத் தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவ/ மாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆசிரியர்களைக் கொண்டு முதன்மைக்கல்வி அலுவலர் மேற்பார்வையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் முடிந்த பின்னர் 25.03.2024 முதல் 02.05.2024 வரை நீட் தேர்வு சார்ந்த பயிற்சிகள் /தேர்வுகள் 12-ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது
- நவம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை பள்ளி அளவில் நீட் மற்றும்ஜேஇஇ தேர்வுகள் சார்ந்த பயிற்சிகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
- இதன் தொடர்ச்சியாக 12 ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வுகள் முடிந்த பின்னர் 25.03.2024 முதல் 02.05.2024 வரை நீட் தேர்வு சார்ந்த பயிற்சிகள்/ தேர்வுகள் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
- ஒரு கல்வி மாவட்டத்திற்கு அதிகபட்சம் இரண்டு பயிற்சி மையங்கள்அமைக்கப்பட வேண்டும். ஒரு மையத்திற்கு 40 மாணவர்கள் என மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம்.
- இணையதள வசதி மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் வசதி கொண்ட பள்ளிகளை பயிற்சி மையங்களாக தேர்வு செய்ய வேண்டும்.
- பயிற்சி மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில (Bilingual) வழியில்பயிற்சிகள்/ தேர்வுகள் நடைபெறும்.
- ஒரு மையத்திற்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும்விலங்கியல் என ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே திறமையும், ஆர்வமும், விருப்பமும் உடைய ஆசிரியர் குழுவினை தெரிவு செய்துகொள்ள வேண்டும். ஏற்கனவே நீட் தேர்வு சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
- ஒவ்வொரு மையத்திற்கும் நாள் ஒன்றுக்கு நான்கு ஆசிரியர்கள்விலங்கியல், வேதியியல், தாவரவியல் மற்றும் இயற்பியல் என்ற வரிசையில் ஆசிரியர்கள் விருப்ப பாடம் அடிப்படையில் சுழற்சி முறையில் ஆசிரியர்களை பயன்படுத்தலாம். அனைத்து பாடங்களிலும் அனைத்து பாடப்பகுதிகளிலும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு பாடப்பகுதி ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
- நவம்பர் மாதம் முதல் வழங்கிய பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிப்தை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- நவம்பர் 2023 முதல் இப்பயிற்சியில் பங்கு பெறும் அனைத்து மாணவர்களும் நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாளான 09.03.2024 க்குள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டட பயிற்சி மையங்களுக்கு பாதுகாப்பாக சென்று வருவதை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
- பயிற்சி வகுப்புகளின் போது காலை சிற்றுண்டி, தேநீர் மற்றும் மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வருவதற்கான பேருந்து கட்டணத் தொகை மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
- பயிற்சி மையங்கள் திங்கள் முதல் சனி வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படூம். காலை சிற்றுண்டி 8.30 மணி முதல் 9.00 மணி வரை வழங்கப்படும்.
- ஒவ்வெரு சனிக்கிழமை அன்றும் காலை 9.15 மணி முதல் 10.45 மணி வரை திருப்புதலும் அதைத் தொடர்ந்து 11.00 மணி முதல் 12.40 மணி வரை வாராந்திர தேர்வுகளும் நடைபெறும். மதிய உணவு இடைவெளிக்குப்பின் பிற்பகலில் கலந்துரையாடல் மற்றும் Motivation அமர்வுகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
- பயிற்சியின் இறுதியில் மொத்தம் 3 திருப்புதல் தேர்வுகள் நடைபெறும்.
இவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.