டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதைப் பார்ப்பது எப்படி என்று காணலாம்.


தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/oraltest/16_2022_GROUP_I_OT_I.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைக் காணலாம்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவைக்கு ஏற்ப குரூப் 1, 2, 3, 4 எனப் பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.


95 பணியிடங்களுக்கான தேர்வு


அந்த வகையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 முதல் 13ஆம் தேதி வரை முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதை 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மார்ச் 7) வெளியாகி உள்ளன.


மார்ச் 26 முதல் 28ஆம் தேதி வரை தேர்வு


தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்மொழித் தேர்வு மார்ச் 26 முதல் 28ஆம் தேதி வரை, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. வாய்மொழித் தேர்வுக்கு மொத்தம் 204 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


அனைத்துத் தேர்வர்களும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் சென்று, தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். தேர்வர்களுக்கு வாய்மொழித் தேர்வு நடைபெறும் தேதியும் நேரமும் தபாலில் அனுப்பப்படாது. குறுஞ்செய்தி மற்றும் இ – மெயில் மூலமாக பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் இ- மெயில் முகவரிக்கு அனுப்பப்படும். தவறான தகவல்களை அளித்தால், அதற்கு டிஎன்பிஎஸ்சி பொறுப்பாகாது என்றும் தெரிவித்துள்ளது.


கூடுதலான, உடனடித் தகவல்களுக்கு ஆணைய இணையதளம் மற்றும் எக்ஸ் பக்கத்தைத் தேர்வர்கள் பார்க்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?


* தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 


* அதில், WHATS NEW பகுதிக்குச் சென்று COMBINED CIVIL SERVICES EXAMINATION- I (GROUP- I SERVICES ) (Oral Test) என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். அல்லது


* தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/oraltest/16_2022_GROUP_I_OT_I.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்தும், தேர்வு முடிவுகளைக் காணலாம்.


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/