• Gold, Silver Price: அடேங்கப்பா..! தங்கம் விலை சென்னையில் புதிய உச்சம் - ஒரு கிராம் ரூ.6,015-க்கு விற்பனை


நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 5 ஆயிரத்து 930 ஆக இருந்த நிலையில், இன்று 85 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி,  ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 46 ஆயிரத்து 720 ரூபாயிலிருந்து 48 ஆயிரத்து 120 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 400 ரூபாய் அதிகரித்துள்ளது.  மேலும் படிக்க



  • NIA Raid: சென்னையில் அதிரடி காட்டும் என்.ஐ.ஏ! பல்வேறு இடங்களில் சோதனை! பெங்களூரு குண்டுவெடிப்பு காரணமா?


சென்னையில் மண்ணடி, முத்தையால் பேட்டை உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் 1ஆம் தேதி பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. மேலும் படிக்க



  • MP S. Venkatesan: எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை ஏன் பிரதமர் தொடங்கி வைக்கவில்லை - எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி


ஒரு ரகசிய திட்டத்தைப் போல எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்ப்பட்டுள்ளன என மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன், ”கடந்த மாதம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அவரே திட்டத்தை தொடங்கி வைத்திருக்கலாம். உண்மை சுடும். எனவே தோப்பூர் பக்கமே போகாமல் விமான நிலையம் சென்றதை நாடே பார்த்தது. மேலும் படிக்க



  • Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் எப்போது..? எத்தனை பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்? ஏபிபி நாடுவின் பிரத்யேக பதிவு


உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. சுமார் 140 கோடி மக்கள் தொகை என்றாலும், வாக்குரிமை உடையோரின் எண்ணிக்கை 96 கோடிதான். இந்த 96 கோடி பேர்தான், உலகின் மிக முக்கிய நாடுகளில் ஒன்றான இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கப் போகிறார்கள்.  நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான தேதி எப்போது அறிவிக்கப் போகிறார்கள் என்பது, தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஏனெனில், நாடு முழுவதும் தேசிய கட்சிகள், மாநிலக் கட்சிகள், பெரிய கட்சிகள், சிறு, குறு கட்சிகள் என அவரவர் சக்திக்கேற்ப, தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர். மேலும் படிக்க



  • Kanimozhi: தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டி.. விருப்ப மனுவை தாக்கல் செய்தார் கனிமொழி..!


மக்களவை தேர்தலுக்கான தேதியை இன்னும் ஓரிரு நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் அதற்கான விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கடந்த 1ம் தேதி முதல் திமுகவின் தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் சமர்பித்து வருகின்றனர். மேலும் படிக்க