• காங்கிரஸ் கட்சி இனி இருக்காது, அதனால் பாஜகவிற்கு விஜயதாரணி சென்றுவிட்டார் - சீமான்


தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துவிட்டது. மேலும் படிக்க



  • PM Modi Visit: பிரதமர் மோடி வருவதையொட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தடை


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டும் நிலையில், குறிப்பாக தமிழகத்தில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் எம்.பி.க்களை பெற கவனம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாகவே நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். மேலும் படிக்க



  • TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்? வெயில் எப்படி இருக்கும்? இன்றைய வானிலை நிலவரம்..


கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி இன்று, தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான  மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக உள் மாவட்டங்களில்  வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் படிக்க



  • ADMK Protest: தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம் அறிவிப்பு - போதைப்பொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் கண்டனம்


போதைப் பொருள் பழக்கத்தை கண்டித்து மார்ச் 4ம் தேதி தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தப்படும் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திமுக அரசு அமைந்த நாளில் இருந்து கடந்த 32 மாத காலமாக தமிழ் நாட்டில் போதைப் பொருட்களினுடைய புழக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எப்போதெல்லாம் சட்டமன்றத்தில் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தொடர்ந்து நான்  வெளிப்படுத்தி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்தி வந்திருக்கிறேன். மேலும் படிக்க



  • மாநில அரசின் திட்டங்களில் 75 சதவீதம் மத்திய அரசின் நிதியே உள்ளது, பொய் கூறுகின்றனர் - நயினார் நாகேந்திரன்


நெல்லை மாவட்டத்தில் வரும் 28ஆம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணி மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த பணிகளை நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் படிக்க