அண்ணனை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த தம்பி
விழுப்புரம்: விழுப்புரத்தில் தம்பியின் மனைவியுடன் அண்ணன் சண்டையிட்டதால் ஆத்திரமடைந்த தம்பி, அண்ணனை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் காகுப்பம் பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கதிர்வேல் என்பவர் வீடுகளுக்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார். இவருடைய தம்பி பாரதியின் மனைவி அதே பகுதியை சார்ந்த ஒருவருடன் தொடர்பில் இருந்து அவருடன் ஒருமாதம் தங்கி விட்டு மீண்டும் தனது கணவரான பாரதியுடன் வந்து குடும்பம் நடத்தியுள்ளார். வேறொருவருடன் தொடர்பில் இருந்த பெண்னை ஏன் வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்துகிறாய் என பாரதியுடன் அண்ணனான கதிர்வேல் அடிக்கடி சண்டையிட்டுள்ளார்.
குடும்ப தகராறு
இந்நிலையில், நேற்று குடும்ப தகராறு காரணமாக குப்புசாமி, தனது தம்பி பாரதியின் மனைவி புஷ்பாவை தகாத வார்த்தையால் திட்டி தாக்கிய நிலையில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய பாரதியிடம் நடந்த சம்பவம் பற்றி அவரது மனைவி கூறியுள்ளார். உடனே கதிர்வேல் வீட்டிற்கு சென்ற பாரதி, அங்கிருந்த கதிர்வேலிடம் எனது மனைவியை நீ எப்படி தாக்கலாம் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அண்ணனை கொலை செய்த தம்பி கைது
இதில் ஆத்திரமடைந்த பாரதி, அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து தனது அண்ணன் என்றுகூட பாராமல் கதிர்வேல் தலையில் தாக்கி வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கதிர்வேல் சம்பவ இடத்திலையே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அண்ணனை கொலை செய்துவிட்டு தம்பி அப்பகுதியிலிருந்து தப்பித்து சென்றுள்ளார். கொலை சம்பவம் குறித்து அப்பகுதியினர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு அண்ணனை கொலை செய்த தம்பியை கைது செய்தனர். குடும்ப தகராறில் அண்ணனை தம்பியே மண்வெட்டியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.