• HBD CM Stalin: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்! பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை!


திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை பற்றி முந்தைய தலைமுறையினர் முதல் இன்றைய தலைமுறையினர் வரை சொல்லி தெரிய வேண்டியதில்லை. பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்த அவர் இளமை காலம் தொட்டே அரசியலிலும், மக்களுக்கான போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்நிலையில், கடந்த 2021 ஆம்  ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து,  முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதல்முறையாக பதவியேற்றார். மேலும் படிக்க



  • EPS: பழிவாங்கும் எண்ணம் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்த ஈ.பி.எஸ்..


முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதை கண்டித்து எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “கள்ளக்குறிச்சி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு அவர்கள் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்”  என குறிப்பிட்டுள்ளார்.  மேலும் படிக்க



  • Madras University: போராட்டத்தில் பேராசிரியர்கள்; கைகொடுக்கும் மாணவர்கள்! முடங்கிய சென்னை பல்கலை.


சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தங்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய பெருமைக்குச் சொந்தமானது சென்னைப் பல்கலைக்கழகம் (University of Madras). இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான இது 1851-ல் சென்னையில் தொடங்கப்பட்டது. மேலும் படிக்க



  • Madras High Court: மதிமுகவுக்கு கிடைக்குமா பம்பரம் சின்னம்? தேர்தல் ஆணையம் பரிசீலிக்க நீதிமன்றம் போட்ட ஆர்டர்!


நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேதி, அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படும் என மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு தேசிய கட்சிகள் தொடங்கி, மாநில கட்சிகள் வரை அனைத்துமே தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. சில கட்சிகள் வேட்பாளர்களை கூட அறிவிக்க தொடங்கிவிட்டன. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் அரசியல் கட்சிகள் இடையே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. மேலும் படிக்க



  • TN Weather Update: சுட்டெரிக்கும் சூரியன்.. 2 முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும்..


தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி இன்று முதல் வரும் 6 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் வரும் மார்ச் 7 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான  மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் படிக்க