முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதை கண்டித்து எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


கடந்த 2011-2016 ம் ஆண்டில் தியாகதுருகம் ஒன்றிய குழு பெருந்தலைவராக தைலம்மாள் அய்யப்பா மற்றும் அவரது கணவரும் தியாகதுருகம் அதிமுக ஒன்றிய செயலாளருமான அய்யப்பா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தியாகதுருகம் ஒன்றிய குழு பெருந்தலைவராக தைலம்மாள் அய்யப்பா மற்றும் அவரது கணவரும் தியாகதுருகம் அதிமுக ஒன்றிய செயலாளருமான அய்யப்பா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து இன்று கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சத்தியராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 9 குழுக்களாக பிரிந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு வீடு மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் அய்யப்பா வீடு மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய ஒன்பது இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.






லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “கள்ளக்குறிச்சி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு அவர்கள் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்”  என குறிப்பிட்டுள்ளார்.