• Virudhunagar Fire Accident: மீண்டும் மீண்டும் சோகம்! விருதுநகரை அடுத்த ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து - 8 பேர் உயிரிழப்பு



விருதுநகரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்த இடத்துக்கு வெம்பக்கோட்டையில் இருந்து தீயணைப்புத்துறை வாகனங்கள் சென்றுள்ள நிலையில் தற்போது தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படிக்க



  • TN Weather Update: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்! அதிகபட்ச வெப்பநிலை எங்கே பதிவானது? இன்றைய நிலவரம் இதோ


தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும். மேலும் படிக்க



  • Cotton Candy Ban: இன்று முதல் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை - அதிரடியாக அறிவித்த தமிழ்நாடு அரசு


தமிழ்நாட்டில் இன்று முதல் பஞ்சுமிட்டாய் விற்க தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • CM Stalin: ரூ.732 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் - உங்கள் ஊருக்கு என்ன பலன் தெரியுமா?


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக, 732 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதைத்தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை திறந்து வைப்பதோடு, அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக 30 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கவுள்ளார். மேலும் படிக்க



  • இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாளே இந்தியா வெற்றி அடையும் நாளாகும் - கனிமொழி எம்பி பேச்சு


நெல்லை பாளையங்கோட்டை மாவட்ட நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள பெல் மைதானத்தில் திமுக சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நாடாளுமன்ற தொகுதி பரப்பரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பேசுகையில், "மத்தியில் இருப்பவர்கள் எந்த சந்தர்ப்பத்தையும் விட்டு விடாமல் ஒரு மசோதாவை, ஒரு திட்டத்தை கொண்டு வருவதாக இருந்தாலும் அதில் மாநில உரிமைகளை அடையாளங்களை அழிக்க கூடிய ஒவ்வொரு செயலையும் பின்னணியில் வைத்து தான் செய்கின்றனர். மேலும் படிக்க