TN Headlines: நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் ஜீரோ கட் ஆஃப்; திரைப்படமாகும் ராமதாஸ் வாழ்க்கை - முக்கிய செய்திகள்!

TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

Continues below advertisement
  • NEET SS Cut-Off: நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் ஜீரோ கட் ஆஃப்- அதிர்ச்சி அறிவிப்பு

முதுகலை நீட் படிப்புகளைத் தொடர்ந்து, நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் ஜீரோ கட் ஆஃப் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ அறிவியலுக்கான தேர்வு வாரியம் (National Board Of Examinations In Medical Sciences) அறிவித்துள்ளது. இது மருத்துவ மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

Continues below advertisement

  • INDIA Bloc: முடிந்ததா I.N.D.I.A. கூட்டணி? காங்கிரசுக்கு சீட் இல்லை, மே.வங்கத்தில் தனித்து போட்டி - மம்தா பானர்ஜி

மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மேற்குவங்கத்தில் தனித்து போராடுவோம் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். மேலும் படிக்க

  • Madurai Jallikattu Ground: தமிழர் பண்பாட்டை அந்த கால ஆளுநர்கள் நன்கு அறிந்திருந்தனர்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன மதுரை அலங்காநல்லூரில் உள்ள கீழக்கரை கிராமத்தில் ரூ.62.78 கோடி செலவில்  கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் படிக்க

  • Dr Ramadoss: திரைப்படமாகும் ராமதாஸ் வாழ்க்கை.. ஹீரோவாக சரத்குமார்? - வெளியான தகவல்!

பொதுவாக மக்களையும், சினிமாவையும் எந்த காலக்கட்டத்திலும் பிரிக்க முடியாது. காதல், ஆக்‌ஷன், பக்தி, பேய் மற்றும் குடும்பக்கதை என பலவிதமான கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் தான் அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், வரலாற்று நிகழ்வுகள், வாழும், வாழ்ந்த பிரபலங்கள் பற்றியும் படங்கள் வந்துக் கொண்டு தான் இருக்கின்றது. மேலும் படிக்க

  • கிளாம்பாக்கத்தில் மற்றொரு சிக்கல்.. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சொல்வது என்ன? தொடரும் குழப்பம்..

தென் மாவட்ட பயணிகளுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்  பயன்பாட்டிற்கு வந்தது. இருந்தும் பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்பொழுது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக எழுந்த வண்ணம் உள்ளன . இந்த நிலையில் தமிழ்நாடு அரசு  ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில்,  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க

Continues below advertisement
Sponsored Links by Taboola