• Lok Sabha Election 2024 : ‘ஏப்ரல் 16-ல் நாடாளுமன்ற தேர்தல்?’ தலைமை தேர்தல் ஆணைய கடிதத்தால் தமிழ்நாட்டில் பரபரப்பு..!


நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிக்கப்படவுள்ள நிலையில், ஏப்ரல் 16ல் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களவை தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரப்போகிறதா? அல்லது பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவே மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்கப்போகிறதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • State Women Policy: மகளிருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! ஒப்புதல் அளித்த தமிழக அமைச்சரவை - லிஸ்ட்டை பாருங்க!


தற்காப்புக் கலை பயிற்சி, கூடுதலாக 50 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய மாநில மகளிர் கொள்கைக்கு, தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2001ஆம் ஆண்டு, மகளிர் கொள்கையைக் கொண்டு வந்த நிலையில், 23 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டு மாநில மகளிர் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • TN Govt: தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - முதலமைச்சர் தலைமையில் சீல் செய்யப்பட்ட டீல்..


சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான ‘Guidance’ மற்றும் ’BIG TECH’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் படிக்க



  • India Stock Market: உலகின் 4வது மிகப்பெரிய பங்குச் சந்தையான இந்தியா! - மொத்த மதிப்பு எத்தனை லட்சம் கோடிகள் தெரியுமா?


ப்ளூம்பெர்க்ஸ் அறிக்கையின்படி, ஜனவரி 22ம் தேதியன்று அன்று சந்தை மூலதனத்தின் மூலம் இந்தியா ஹாங்காங்கைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது மிகப்பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்துள்ளது. செவ்வாயன்று இந்தியாவின் சந்தை மதிப்பு 4.33 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அதேநேரம்,  ஹாங்காங்கின் பங்குச் சந்தை மதிப்பு 4.29 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக பின்தங்கியுள்ளது. மேலும் படிக்க



  • Minister Udhayanidhi Stalin: முயல் - ஆமை கதையாகிவிடும்; இதை மட்டும் செய்யாதீங்க! நம் இலக்கு இதுதான்! - திமுகவினருக்கு உதயநிதி வைத்த கோரிக்கை..


சேலத்தில் நடைப்பெற்ற மாநாடு திமுகவுக்கான மாநாடு மட்டுமல்ல, இந்தியாவுக்கான மாநாடு என இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டிற்காக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்தும் இடத்திற்கும் பயணித்தோம் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் தள பதிவில், “ சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணியின் மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும். மேலும் படிக்க