• Tamil Nadu Cabinet Meeting: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.. ஜனவரி 23ம் தேதி கூடுகிறது..!


தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வருகின்ற ஜனவரி 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜனவரி 23ம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.  இந்த கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல், சட்டமன்ற கூட்டத் தொடரை எப்போது கூட்டுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க



  • DMK Election committee: திமுக அதிரடி - கனிமொழி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு - 3 குழுக்கள் அமைப்பு


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கும், பணிகளை ஒருங்கிணைப்பதற்குமான குழுவை அமைத்து திமுக அறிவித்துள்ளது. அதில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கு கனிமொழியும், தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழுவிற்கு அமைச்சர் கே.என். நேருவும் தலைமை தாங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • OPS Case: அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு தடைவிதிக்க முடியாது - ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்


கடந்த 2022ம் ஆண்டு ஜுலை மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி கட்சியில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்  மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேர்  கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், அவருக்கு எதிராகவே அமைந்தன. மேலும் படிக்க



  • TN Rain Alert: டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கு எப்படி?


தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க



  • Gayathri Raghuram Joins AIADMK: அரசியலில் பரபரப்பு..! அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்


தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தனிப்பட்ட முறையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்துவந்தார் காயத்ரி ரகுராம். இதனால் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைமை அறிவித்தது. அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து தனது ராஜினாமா கடிதத்தை காயத்ரி ரகுராம் கொடுத்ததையடுத்து பாஜக தலைமை  ஏற்றுக்கொண்டது. மேலும் படிக்க