தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வருகின்ற ஜனவரி 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜனவரி 23ம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.  


இந்த கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல், சட்டமன்ற கூட்டத் தொடரை எப்போது கூட்டுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.