- CM Stalin Speech: அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல; பாவ யாத்திரை - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் அறிமுக கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்று வருகிறார். அப்போது பேசிய அவர், ”திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்ததால் தற்போது இளமையாக உணர்கிறேன். எனக்கு வயது 70 ஆனாலும், தற்போது 20 வயதைப் போல் உணர்கிறேன். உதயநிதி காட்டிய ஒற்றை செங்கல்லை நினைத்து இன்றுவரை புலம்பி வருகின்றனர். எதிரிகள் எடுக்கும் ஆயுதத்தை நாமும் எடுக்க வேண்டும். திசை திருப்புவோரின் சதிகளில் நாம் சிக்க வேண்டாம். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-tamil-nadu-chief-minister-m-k-stalin-keynote-speech-at-the-dmk-youth-meeting-in-anna-arivalayam-131824/amp
- EPS Statement: கல்வியாளர்களை கேட்காம, உயர்கல்வியில் திட்டம் கொண்டு வருவதா? ஈ.பி.எஸ் கண்டனம்..
கல்வித் துறையில் மாறுதல்களை கொண்டுவரும் முன்பு, கல்வியாளர்களை அழைத்து, எதிர்கால தமிழக இளைஞர்களின் நலனை மனதில் நிறுத்தி உயர்கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என ஈபிஎஸ் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்டு என் போன்ற கோடிக்கணக்கான தொண்டர்களால் நிலை நிறுத்தப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31 ஆண்டு கால ஆட்சியில், கல்வித் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/changes-in-the-education-sector-the-higher-education-policy-should-be-implemented-the-welfare-of-the-future-youth-of-tamil-nadu-131806/amp
- TN Weather Update: தமிழ்நாட்டில் சதமடிக்கப்போகும் வெப்பநிலை.. வெப்ப அழுத்த எச்சரிக்கை.. வானிலை நிலவரம் இதோ..
29.07.2023 முதல் 04.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29.07.2023 மற்றும் 30.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/the-meteorological-department-has-said-that-the-temperature-will-cross-100-degrees-fahrenheit-today-and-tomorrow-in-tamil-nadu-131823/amp
- Medical College: மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கை.. கல்லூரி பதிவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு.. முழு விவரம்..
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி, பல்மருத்துக்கல்லூரி, இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி, தனியார் மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி, தனியார் பல்கலைக்கழகங்கள், வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்வதற்கு 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/online-registration-is-from-25th-to-3rd-august-for-selection-of-government-reserved-seats-and-administrative-reserved-seats-in-medical-colleges-131778/amp
- ராமேஸ்வரத்தில் அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்; அண்ணாமலைக்கு கொடுத்த அசைமெண்ட்கள் - நடைபயணத்தில் சுவாரஸ்யம்