மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் நேற்று நடைபெற்ற கீர்த்திகை வழிபாட்டில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறியதாவது: தமிழையும், சைவத்தையும் அடிப்படையாகக் கொண்ட தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு உள்ளூர்  கோட்டாட்சியர் தடை விதித்து நோட்டீஸ் வழங்கி உள்ளார். 




KGF Beast OTT: இனி ரசிச்சு ரசிச்சு பார்க்கலாம்.. ஓடிடி ரிலீஸுக்கு தயாரான கேஜிஎப், பீஸ்ட்! தேதி எப்போது தெரியுமா?


தருமபுரம் ஆதீனம் அவர்கள் மடத்தின் பாரம்பரியத்தையும், மரபுகளையும் காக்கின்ற இடத்தில் தற்போது இருக்கின்றார். கடந்த காலங்களில் இது போன்ற எதிர்ப்புகள் வந்த போது கூட பல எதிர்ப்புகளையும் மீறி பட்டினப் பிரவேசம் என்கிற இந்த நிகழ்ச்சியானது நடைபெற்று வந்தது. திருமடங்களுக்கு என்று பாரம்பரியமும், மரபுகளும் தனியாக உள்ளது. இதனை தடை செய்வது அரசாங்கம் இந்து சமய நிகழ்வுகளில் தலையிடும் செயல் ஆகும். 




Charak Shapath Oath: மதுரை மருத்துவ கல்லூரி சரக்பத் உறுதிமொழி ஆங்கிலத்தில்தான் எடுக்கப்பட்டது - முதல்வருக்கு மருத்துவர்கள் சங்கம் கடிதம்


சட்டப்படியும் கூட கோட்டாட்சியர் செய்த செயல் தவறானது. உடனடியாக இதனை வாபஸ் பெற வேண்டும். வழக்கம் போல் ஆதினத்தின் பாரம்பரியங்கள், மரபுகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது இந்து மக்கள் கட்சியின் கோரிக்கை ஆகும். இதனை ஆதீனத்திடம் நேரில் வலியுறுத்துவோம்.மேலும், தமிழகத்தில் உள்ள மடாதிபதிகள் அனைவரும் இணைந்து முதல்வரை சந்தித்தனர். இந்து சமய அறநிலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதுவும் மிகவும் வரவேற்கத்தக்கது. 




Maharshi Charak Shapath Oath : ’சமஸ்கிருத உறுதி மொழி வாசித்தது எனக்கே தெரியாது’ எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுத்துவிட்டர்கள்..! – மதுரை மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் பேட்டி


ஆனால், அங்கு சென்ற பாரம்பரியம் மிக்க நமது மடாதிபதிகளுக்கு உரிய வரவேற்பு மரபுகள் படி மரியாதையும் செலுத்தப்படவில்லை. தாங்கள் அனைவருக்கும் பொதுவான அரசு என சொல்லிக் கொள்பவர்கள் மடாதிபதிகளை காக்க வைத்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். அதேபோல் மடாதிபதிகளும் இந்த ஆட்சியை ஆன்மீக ஆட்சி என்று தெரிவித்துள்ளார்கள். இந்தச் சூழ்நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்திற்கு அரசு தடை விதித்து இருப்பது முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளது எனவும், இதனை மக்கள் இடத்தில் கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தார்.