மதுரை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற சரக்பத் உறுதிமொழி ஆங்கிலத்தில்தான் எடுக்கப்பட்டது. தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கைப்படியே வைட்கோட் செர்மனி, சரக்சபத் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தேசிய மருத்தவ ஆணைய சுற்றறிக்கை குறித்து அறிவுறுத்தல் எதுவும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து வரவில்லை. மதுரை மருத்துவ கல்லூரி டீன் பொறுப்பில் இருந்த ரத்தினவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


அவர்கள் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,


தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “ நேற்றைய முன்தினம் 30 ஏப்ரல் அன்று மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் விழாவில் தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய "சரக்கா சபதம்" என்னும் உறுதிமொழியை மருத்துவ மாணவர்களுக்கு வழங்கியமைக்காக கல்லூரி முதல்வர் டாக்டர் ரத்னவேல் அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் பின்வரும் வேண்டுகோளை மதிப்பிற்குரிய முதல்வர் ஐயா அவர்களின் கவனத்திற்கு சமர்ப்பிக்கிறோம்.


தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் "சரக்கா சபதம்" என்னும் உறுதிமொழியை தேசிய மருத்துவ பின்வரும் காரணங்களுக்காக இந்த சரக்கா சபதம் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சங்கம் தெரிவித்திருந்தது.


சரக்கா சபதம் மூல ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை மேன்மைப்படுத்தி கூறியது.  பசுக்களை மேன்மைப்படுத்தி கூறியது. ஆண் பெண் நோயாளிகள் பேதங்களை கூறி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நிபந்தனைகள் விதித்தது. "மகரிஷி சரக்கா நவீன மருத்துவத்தை பயன்படுத்தாதவர் என்பது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஹிப்போ கிரிடீஸ் உறுதிமொழியை


இந்தியாவிலும் பயன்படுத்த வேண்டும் என்பது ஆகையால் சரக்கா சபதம் மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் பயன்படுத்தக் கூடாது என்பதை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் உறுதியாக நம்புகிறது. இந்த நிலையில் 7.2.2022 அன்று தேசிய மருத்துவ ஆணைய எம்பிபிஎஸ் சேர்க்கை குறித்த


ஆன்லைன் கூட்டத்தில் அதனுடைய தலைவர் திருமதி அருணா வணிகர், அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு "வைட்கோட் செரிமனி என்பதனை இந்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தவும் (இதுநாள்வரை இதுபோன்ற விழாக்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடைபெற்றது இல்லை)


அந்த விழாவில் சரக்கா உறுதிமொழியை அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் பிரமாணம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும் முதலாமாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து பல்வேறு ஆணைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து 31.2.2022 அன்று தேசிய மருத்துவ ஆணையத்தில் இருந்து ஒரு சுற்றறிக்கை அனைத்து மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கும் அதனுடைய தலைவர் அவர்களால் வழங்கப்பட்டிருந்தது.


இந்த சுற்றறிக்கை என்பதையும் முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விழா வைட் கோட் செரிமனி நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் சரக்கா சபதம் உறுதிமொழி மருத்துவ என்றும் அனைத்து முதல்வர்களுக்கும்


மாணவர்களால் ஏற்கப்பட வேண்டும். அறிவுறுத்தப்பட்டிருந்தது.


பல்வேறு முதல்வர்களுக்கும் மருத்துவர்களுக்கும் சங்கத்திற்கும் இந்த தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கை குறித்து மாறுபட்ட கருத்து இருந்தாலும் இதுகுறித்து வேறு சுற்றறிக்கையோ அறிவுறுத்தல்களோ தமிழக அரசிடமிருந்தும், மத்திய அரசிடம் இருந்தும் வராத நிலையில் பெரும்பாலான தனியார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் இந்த சுற்றறிக்கை பின்பற்றி வைட் கோட் செரிமணி மற்றும் சரக்கா சபதத்தை மருத்துவ மாணவர்களை எடுக்க வைத்தனர்.


இதுபோலவே 30,4.2022 அன்று மதுரை மருத்துவக் கல்லூரியிலும் வைட்கோட் செரிமணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தி இருந்த சரக்கா சபதமும் மருத்துவ மாணவர்கள் உறுதி மொழியாக எடுத்தனர். இந்த நிகழ்வில் சமஸ்கிருதம் மற்றும் பிற மொழிகள் பயன்படுத்தி எந்தவித உறுதிமொழியை அல்லது பேச்சுக்களோ சங்கம் நடைபெறவில்லை என்பதனை மரியாதைக்குரிய முதல்வர் அவர்களுக்கு, தெரியப்படுத்துகிறது. வைட்கோட் செரிமனி மற்றும் சரக்கா உறுதிமொழி மதுரையில் நடந்த நிகழ்வில் ஆங்கிலத்தில் தான் எடுக்கப்பட்டது. ஆனால் தவறுதலாக தவறுதலாக தினசரி மற்றும் தொலைக்காட்சிகள் மருத்துவ மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தார்கள் என்று செய்தி படுத்தப்பட்டது.


இது முற்றிலும் பொய் ஆங்கிலத்தில் தான் உறதிமொழி எடுக்கப்பட்டது என்பதனை மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கவனத்திற்கு கொண்டு வருகிறோம் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தி தான் இந்த வைட் கோட் செரிமனி நடைபெற்றது. வைட் கோட் செரிமனி குறித்து தமிழக அரசு அல்லது மருத்துவ கல்வி இயக்குனர் அவர்கள் எந்தவித ஆணையும் வழங்காத நிலையில் வைட் கோட் செரிமணி நடத்துவது குறித்து அலுவலக ரீதியாக எந்தவித தடையும் இல்லாத நிலையில் ஒரு சில இடங்களில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சிலர் கலந்துகொண்டு அதில் சில இடங்களில் ஹிப்போகிரடிஸ்  உறுதிமொழியும் சில இடங்களில் சரக்கா உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.


தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மேற்கூறிய உண்மைகளை மாண்புமிகு முதல்வர் அவர்களின் மேலான பார்வைக்கு கொண்டு வந்து சரக்கா சபதத்திற்கு சங்கமும் பெரும்பாலான அலுவலர்களும் மருத்துவர்களும் எதிர்ப்பாக இருந்த நிலையிலும் தேசிய மருத்துவ சுற்றறிக்கையின் பெயரிலேயே இவை எடுக்கப்பட்டது என்பதனை ஆணையத்தின் தெரிவித்துக்கொள்கிறோம்.


இதுபோலவே மதுரை மருத்துவக்கல்லூரி நிகழ்விலும் மருத்துவ மாணவர்கள் சரக்கா உறுதிமொழியை ஆங்கிலத்தில் தான் எடுத்தார்கள் என்றும் இதில் முதல்வர் மற்றும் பிற அலுவலர்கள் யாரும் எந்தவித உள்நோக்கத்துடன் செயல்படவில்லை என்பதனையும் தங்களது கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறோம்.


முதல்வர் இந்த நிகழ்வை கனிவுடன் பரிசீலித்து முதல்வர் டாக்டர் ரத்தினவேலை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரியில் முதல்வராக பணியமர்த்தி ஆணையிடும்படி அன்புடன் வேண்டுகிறோம். தமிழக அரசில் பணிபுரியும் அனைத்து முதல்வர்களும் மருத்துவர்களும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் என்றும் தமிழக அரசின் ஆணைகளுக்கும். கொள்கைகளுக்கும், விதிகளுக்கும் மாறாக செயல்பட மாட்டோம் என்றும் மாணவர்களும் அவ்வாறே என்றும் தெரிவித்து கொள்கிறோம்.