தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி(Senthil Balaji) சமூக வலைதளங்களில் அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி மின்சாரத்துறை தொடர்பான கருத்துகளை பதிவிட்டி வந்தார். இந்நிலையில் அவருடைய ட்விட்டர் பக்கத்தை சில நபர்கள் இன்று ஹேக் செய்துள்ளனர்.
அவருடைய ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றியதுடன் அதில் சில பதிவுகளையும் அவர்கள் செய்துள்ளனர். அதன்படி, “அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. இன்று, முன்னெப்போதையும் விட, ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை” என்ற பதிவு போடப்பட்டுள்ளது. மேலும் கோவிட் 19 உடன் போராடும் மக்களுக்கு உதவ $1 மில்லியன் திரட்ட விரும்புகிறோம் என்ற பதிவும் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அதற்காக ஒரு கிரிப்டோ கரன்சி வேலட் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜியின் பெயரை மாற்றி வரியோரியஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய ட்விட்டர் கணக்கில் போடப்பட்டிருந்த மின்சாரத்துறை அமைச்சர், கரூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட விஷயங்களையும் ஹேக்கர்கள் நீக்கியுள்ளனர்.
மேலும் படிக்க: பிளாஸ்டிக் பையில் கிடந்த தொழிலதிபரின் உடல்... சென்னையில் பயங்கரம்... 6 தனிப்படைகள் தீவிர விசாரணை
முன்னதாக கரூரில் நேற்று தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கு பெற்றனர்.
அப்போது பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் வீடுகளுக்கு தமிழக அரசு சார்பில் 7.5 லட்சமும், பயனாளிகள் பங்கு தொகையாக 1 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசின் நிதி ரூபாய் 1.5 லட்சம் மட்டுமே ஆகும். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொளந்தானூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் சிதிலமடைந்து இருந்த நிலையில், அவற்றை அகற்றிவிட்டு 150 வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன என்றார்.
மேலும் படிக்க: "பெண்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுவேன்" : பாஜகவில் இணைந்த பைக் ரேசர் அலிஷா அப்துல்லா!