பிரபல ரேசரும், சினிமா நடிகையுமான அலிஷா அப்துல்லா அண்ணாமலை முன்பாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார், இதுகுறித்து அவர் ட்விட்டரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.


தமிழ்நாட்டில் பாஜக


தேசமே கையில் இருந்தாலும், கைக்குள் அடங்காத மாநிலங்களாக தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் இருந்து வருகின்றன. அதிலும் காலூன்ற வேண்டும் என்பதற்காக பல யுக்திகளை பாஜக கையிலெடுத்து வருகிறது. முன்னிலையில் ஆக்டிவான தலைவர்களை கொண்டு வருவது, எப்போதும் செய்திகளில் இருப்பது, ஏற்கனவே பிரபல்யம் மிக்க முகங்களை கட்சிக்குள் இழுப்பது என்று பல வேலைகள் முழு வீச்சில் நடைபெருகின்றன. இதனை காணும் அரசியல் விமர்சகர்கள் தமிழக அரசியலில் பாஜகவின் இருப்பை எதிர்காலம் புறக்கணிக்க முடியாது என்றும் கூறி வருகின்றனர். பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் என்றில்லாமல் சினிமா சின்னத்திரை நடிகர்கள், விளையாட்டுத் துறையினர், சமூக வலைதளங்கள் பிரபலமாக இயங்கி வருபவர்கள் என யார் இருந்தாலும் இழுத்துக்கொள்ள தயாராக இருந்து வருகிறது. தற்போது அதில் ஒரு அடுத்த கட்டமாக புதிய பிரபலம் ஒருவர் பாஜகவில் இணைகிறார். 






பாஜகவில் இணைந்த ரேசர்


பிரபல கார் மற்றும் பைக் ரேஸ் வீராங்கனையான அலிஷா அப்துல்லா பாஜகவில் இணைந்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் அண்ணாமலை, வி.பி.துரைசாமி மற்றும் பாஜக பிரமுகர்கள் முன்னிலையில் அலிஷா அப்துல்லா பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்தது குறித்து வீராங்கணை அலிஷா அப்துல்லா ட்விட்டரில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: Swiggy இன்ஸ்டாமார்ட்.. அதிரடியாக அதிகரித்த ஆணுறை விற்பனை.. இந்த மாநிலத்துக்கு முதலிடம்..


ட்விட்டரில் மகிழ்ச்சி பதிவு


அவருடைய பதிவில், "தமிழ்நாடு பாஜக குடும்பத்தில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு அண்ணாமலையும் அமர்பிரசாத் ரெட்டியும் அளித்த மரியாதை மற்றும் அங்கீகாரம் காரணமாகவே நான் பாஜகவில் இணைந்திருக்கிறேன். பாஜகவில் இருந்து பெண்களின் முன்னேற்றத்துக்காக என்னால் இயன்றதை செய்வேன்",என்று அவர் உறுதியளித்துள்ளார்.






நடிகர் அஜித்திற்கு நெருக்கம்


இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டதாவது, "விளையாடுத்துறையின் உண்மையான ஜாம்பவான், அற்புதமான வீரர், அலிஷா அப்துல்லாவை பாஜகவுக்கு வரவேற்பதில் மகிழ்கிறேன். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த விளையாட்டுத்துறையில் தடைகளை உடைத்து ஊக்கமளிக்கும் பெண்ணாக விளங்குவது மட்டுமின்றி, முத்திரையும் பதித்துள்ளார். விளையாடுத்துறைக்கு பிரதமர் மோடி ஆற்றி வரும் பணிகளைக் கண்டு அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.' என்று குறிப்பிட்டுள்ளார். கார், பைக் பந்தயங்களில் இந்தியாவிலேயே சாம்பியன் பட்டம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். இதேபோல தொடர்ந்து பல்வேறு பந்தயங்களில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். அதர்வா நடித்த இரும்புக்குதிரை திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் பெண் பைக்கராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார், அதன் பின்னர் விஜய் ஆண்டனி நடத்த சைத்தான் படத்தில் நடித்தார். இவரை போலவே ரேசராகவும் நடிகராகவும் இருக்கும் அஜித் குடும்பமும் இவரது குடும்பமும் மிகவும் நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்