தமிழகத்தில் ஜூன் 7ம் தேதிக்கு பிறகும், மாவட்ட அளவில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் கடுமையாக தொடரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
முன்னதாக, 5 சதவிகிதத்துக்கும் குறைவாக தொற்று பாதிப்பு விகிதம் (Positiviity rate), தடுப்பூசி திட்டத்தின் கீழ் அதிக பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பயனாளிகளில் 70 சதிவிகித பேருக்கு தடுப்பூசி நிர்வகித்த மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால், தமிழ்நாட்டின் மொத்த தொற்று பாதிப்பு விகிதம் (Total Positivity rate) மத்திய அரசு பரிந்துரைத்தை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. மேலும், அதிக பாதிப்பு கொண்ட முன்னுரிமை பயனாளிகளுக்கு குறைந்த அளிவில் மட்டுமே தடிப்பூசி நிர்வகிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது நடைமுறையில் உள்ள தளர்வற்ற பொது முடக்கநிலை சில தளர்வுகளுடன் ஜூன் 7ம் தேதிக்குப் பிறகு தொடர் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
‛அலட்சியத்துக்கு விலை மரணம் மட்டுமே’ டாக்டர் சீரியஸ் அட்வைஸ்..!
Positivity rate என்றால் என்ன?
100 கொரோனா தொற்று மாதிரிகளை பரிசோதனை செய்வதில் எத்தனை தொற்றுகள் உறுதி செய்யப்படுகின்றன என்பதை பொறுத்து இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது.
கண்டறியப்பட்ட தொற்று எண்ணிக்கை
----------------------------------------------------- * 100
ஒட்டுமொத்த கொரோனா சோதனைகள்
இந்த விகிதத்தின் மூலம், சமூக அளவில் sars-cov-2 (கொரோனா வைரஸ்) பரவலின் தற்போதைய நிலை என்ன என்பதையும், நோய்த்தொற்று தாக்கத்திற்கு ஏற்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறதா ? என்பதையும் கணக்கிடமுடியும்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலை என்ன?
தமிழ்நாட்டின், தற்போது தொற்று பாதிப்பு விகிதம் 15.5 சதவிகிதமாக உள்ளது. அதாவது, தமிழகம் முழுவதும் 100 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 16 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்படுகிறது. கடந்த மே 24ம் தேதியன்று இந்த எண்ணிக்கை 21 ஆக இருந்தது.
மாநிலத்தின் தினசரி கொரோனா கடந்த 10 நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த 28 நாட்களில் இல்லாத அளவில் மிகக்குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் குறையத் தொடங்கியது.
கோவையில் கொரோனா அதிகரிக்க என்ன காரணம்? - சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்
உதாரணமாக, ஏப்ரல் மாத நடுப்பகுதியில், சென்னையின் தொற்று பாதிப்பு விகிதம் 21 சதவிகிதமாக இருந்தது. தொடர்ச்சியான ஊரடங்கு, மற்றும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டதன் விளைவாக தற்போது இந்த எண்ணிக்கை 8 சதவிகிதமாக குறைந்துள்ளது.
அதேபோன்று, செங்கல்பட்டு மாவட்டத்திலும் இந்த போக்கை கண்டறியலாம். மே 12ம் தேதி 2,686 பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வெறும் 1008 பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்களில், அதன் தொற்று பாதிப்பு விகிதம் 32% ல் இருந்து 19 சதவிகிதமாக குறைந்தது.
இருப்பினும், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் இந்த போக்கு காணப்படவில்லை. உதாரணமாக, திருப்பூர், கரூர், விருதுநகர், நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை, கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வாராந்திர பாதிப்பு வீதம் குறையவில்லை. எனவே, தளர்வுகளற்ற முழு ஊரடங்கினால் சில மாவட்டங்களில் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் குறையாமல் உள்ளன.
கடந்த 24-ந் தேதி முதல் 7 நாட்களுக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, ஜூன் 1 முதல் மேலும் 7 நாட்களுக்கு (ஜூன் ) தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடித்தால்தான் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று முன்னதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.