தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நோய்த் தாக்குதல் அதிகம் இல்லாத / கட்டுப்பாட்டு மண்டலங்களில் வராத பகுதிகளில் மட்டும் தளர்வுகளுடன் கூடிய நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும். கட்டுப்பாடு மண்டலங்களில் பொது முடக்கம் கடுமையாக செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எதற்கெல்லாம் தடை:
மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் போக்குவரத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்து, திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள்,பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு-விளையாட்டு-கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகிய செயல்பாடுகளுக்கு ஜூலை 12ம் தேதி காலை 6:00 மணி வரையிலும் தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.
Temple Reopening | சென்னையில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு : பக்தர்கள் உற்சாகம்..!
எதற்கெல்லாம் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள்:
அரசு மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகளுக்கு (Business to Business Exhibitions) அனுமதி. உரிய அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் இதில் பங்கேற்க அனுமதி. பொருட்காட்சி அரங்குகளின் அமைப்பாளர்கள், விற்பனைக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் என எல்லோரும் கட்டாயம் RTPCR பரிசோதனையோ அல்லது இரண்டு தவணைகளில் தடுப்பூசியோ செலுத்தியிருக்க வேண்டும்
உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு உண்ண அனுமதி
தேநீர்க் கடைகளில் நிலையான வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி 50% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி
கேளிக்கை விடுதிகளில் உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுகள் மற்றும் உணவகங்கள் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி செயல்படலாம்
தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்பச் சேவை நிறுவனங்கள் 50%, பணியாளர்களுடன் இயங்க அனுமதி
தங்கும் விடுதிகள், உறைவிடங்கள், விருந்தினர் இல்லங்கள் (Guest House) செயல்படலாம். அங்குள்ள உணவு விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி
அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையில் செயல்படலாம்
உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.
SRF/JRF, M.phil, Phd., ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பணிகளைத் தொடர்புடைய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ள அனுமதி. இவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்காகக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் செயல்படலாம்
அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD போன்ற அரசு பயிற்சி நிலையங்கள்/மையங்கள், உரிய காற்றோட்ட வசதியுடன் 50% பயிற்சியாளர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் செயல்படலாம்
டாஸ்மாக் கடைகள் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை செயல்படலாம்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதி. திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை
அனைத்துத் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்
வணிக வளாகங்கள் காலை 9:00 மணி முதல் இரவு 6:00 மணி வரை செயல்படலாம். அங்குள்ள உணவகங்களில் 50% இருக்கைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி உணவுண்ண அனுமதி. திரையரங்குகள் மற்றும் விளையாட்டு அரங்குகளுக்கு அனுமதி இல்லை.
மாவட்டத்திற்குள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப் பேருந்துப் போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி
பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம். பூங்காக்களில் திறந்த வெளியில் நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு மட்டும் அனுமதி. தண்ணீர் தொடர்பான விளையாட்டுகளுக்கு அனுமதி இல்லை
மாவட்டங்களுக்கிடையே பயணிக்க இ-பாஸ்/இ-பதிவு நடைமுறை இரத்து செய்யப்படுகிறது.
நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாகத் திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி
இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி
கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
கடைவாசலில் உடல் வெப்பநிலை பரிசோதனையைச் செய்வதுடன், கை சுத்திகரிப்பான்கள் நிச்சயம் இருக்க வேண்டும். குளிர்சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகளும் ஜன்னல்களும் திறக்கப்பட்டுப் போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்பட வேண்டும்
கடை நுழைவு வாயிலில் காத்திருக்கும் மக்களுக்குத் தனிமனிதச் சமூக இடைவெளிக்கான குறியீடுகள் போடப்பட வேண்டும்.
மதுரை அழகர்கோயில் திறக்கப்பட உள்ள நிலையில் கிருமி நாசிகள் தெளிக்கப்பட்டு வருகிறது !