Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 18 Jun 2021 08:14 PM
தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவால் 8 ஆயிரத்து 633 நபர்கள் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 492 நபர்களுக்கு புதியதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 1,089 நபர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 210 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 287 நபர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இன்று மட்டும் 19 ஆயிரத்து 860 நபர்கள் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  


 

ஆந்திராவில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன ?

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 6 ஆயிரத்து 341 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆந்திரா முழுவதும் 18 லட்சத்து 39 ஆயிரத்து 243 ஆக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. இன்று மட்டும் ஆந்திராவில் 8 ஆயிரத்து 486 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

513 மாவட்டங்களில் 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

நாட்டில் 513 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  தற்போது பாதிப்பில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை 96 சதவீதமாக உள்ளது. தடுப்பூசி போட்டவர்களில் 75 முதல் 80 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை ஏற்படவில்லை.

டெல்லியில் 165 பேருக்கு புதியதாக கொரோனா

டெல்லியில் கொரோனா பரவல் அந்த மாநில அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அந்த மாநிலத்தில் புதியதாக 165 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 14 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இன்றைய நிலவரப்படி, இன்னும் 2 ஆயிரத்து 445 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

ஆந்திராவில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், ஆந்திராவிலும் ஊரடங்கை நீட்டித்து அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, வரும் 30-ந் தேதி வரை ஆந்திராவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல், காலை 6 மணி வரை முழு முடக்கம் கடைபிடிக்கப்பட உள்ளது

2,500 குழந்தைகள் கொரோனா நோய்த் தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர் - மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன்

தமிழ்நாட்டில்  2,500 குழந்தைகள் கொரோனா நோய்த் தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.  தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.  

நல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும்

மூன்றாம் பாலினத்தவர் நல வாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் 13,58,486 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் 13,58,486 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, ஒரு வாரக்கணக்கில் போடப்பட்ட அதிகபட்ச தடுப்பூசி எண்ணிக்கை இதுவாகும்.            


நாடு முழுவதும் 26,89,60000க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் நிர்வகிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும், 26,89,60000க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் நிர்வகிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அயல்நாடுளில் அதிகரிக்கத் தொடங்கும் தினசரி கொரோனா தொற்று

அமெரிக்கா, இங்கிலாந்து, தெற்கு ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் சரிந்து கிடந்த தினசரி கொரோனா தொற்று, கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நான்கு மாதங்களுக்குப் பிறகு, இங்கிலாந்து நாட்டில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 10,000-ஐத் தாண்டியுள்ளது. 


 



 

நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைகிறது.

தொடர்ந்து 36-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த காரணத்தினால்,கொரோனா  தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமான முறையில் குறைந்து வருகிறது. கடந்த மே 9ம் தேதி 37 லட்சத்துக்கும் அதிகமானோர், கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 7,93,708 ஆக குறைந்துள்ளது. 


சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை (Active Cases) தொடர்ந்து குறைவதால், மருத்துவ உள்கட்டமைப்பு வசதியை மேலும் வலுப்படுத்தி, கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் போன்ற அதிக ஆபத்துள்ள கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த முடியும். இதன், மூலம் வரும் நாட்களில் கொரோனா இறப்புகளை கணிசமான முறையில் குறைக்க முடியும். 

28,506 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வெறும் 559 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், 28,506 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோன பரிசோதனையில் வெறும் 559 பேருக்கு மட்டுமே கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  அதாவது, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் 100 பேரில், 2க்கும் குறைவானோர் (Total Positivity Rate) மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்னர்.   


               

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,208 பேருக்கு கொரோனா தொற்று

நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,208 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,84,91,670 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,03,570 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Background

தமிழ்நாட்டில்  கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 9,118  பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதில், அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 1,227 பேர் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 60 நாட்களுக்குப் பிறகு, மாநிலத்தின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும்  குறைவாக சரிந்துள்ளது.        


 புதிதாக, கடந்த 24 மணி நேரத்தில் 22,720 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 210 ஆக உள்ளது.   

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.