தமிழ்நாட்டில் முதல் முறையாக சொகுசு கப்பல் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து சொகுசு கப்பல் பயண திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கார்டேலியா(Cordelia) என்ற தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் ஆழ்கடல் பகுதிக்கு மக்கள் சுற்றுலா சென்று பார்க்கும் வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்து வைக்க திட்டமிட்டிருந்தது. 


இந்நிலையில் இன்று அத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அந்த சொகுசு கப்பல் வசதிகள் என்னென்ன? அதில் பயணம் செய்வது எப்படி?


 


சொகுசு கப்பல் திட்டம்:


இந்த சொகுசு கப்பல் பயணத்திற்கு 2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் திட்டங்கள் உள்ளன. அதாவது சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வகையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டம் உள்ளது. அதேபோல்  சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலா திட்டம் உள்ளது.




கார்டிலாவின் இந்த சொகுசு கப்பல் சுமார்  700 அடி நீளம் கொண்டள்ளது. அத்துடன் இந்த கப்பல் 10 தளங்கள் கொண்டது. மொத்தம் 796 அறைகள் உள்ளன. இவை தவிர ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் கலையரங்கம், 4 பெரிய ரெஸ்டாரண்டுகள், மதுகூடம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, மசாஜ் செண்டர், யோகாசனம் செய்யும் இடம், நீச்சல் குளம், கேசினோ, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது. 


சொகுசு கப்பல் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?


இந்த சொகுசு கப்பல் திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். இதற்கான விலை தனியார் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. சுமார் 22 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை இந்த சொகுசு கப்பலில் பயண திட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க:எப்படி கேட்டாலும் சொல்வாங்க! திருக்குறளில் உலக சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவிகள்!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண