தமிழ்நாட்டிற்கு புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அவர் புனித செயண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தை சென்று பார்த்து விட்டு இந்தப் பதவியை செய்வதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சில கருத்துகளை முன்வைத்துள்ளார். 


அதன்படி, “18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையும் 'இயங்கி வருகிறது. தற்போது இந்த புனித ஜார்ஜ் கோட்டையானது மிகவும் பழைய கட்டிடமாகவும், போதிய இடவசதி இல்லாமலும், நவீன வசதிகள் இல்லாமலும் செயல்பட்டுவருகிறது.


 






எனவே புதிதாகவும், இடவசதியோடும், நவீன தொழில்நுட்பத்துடன், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தினை கட்ட வேண்டும். கூடுதலாக ஒரு சட்டப்பேரவை மற்றும் தலைமைச் 'செயலகத்தினை தமிழகத்தின் மையமான திருச்சியில் அமைத்து, சட்டப்பேரவை நிகழ்வுகளை சென்னையிலும், திருச்சியிலும் மாற்றி மாற்றி நடத்திட வேண்டும். மேலும், தமிழக அமைச்சாவை கூட்டத்தினை சென்னையில் மட்டும் நடத்தாமல், வேறு ஊர்களிலும் நடத்திட கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 


அவரின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இருந்தார். அவர் இம்முறை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை எம்பியாக போட்டியின்றி தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை ப.சிதம்பரம் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வாகியிருந்தார்.




மேலும் படிக்க: பொதுத்தேர்வை எழுதாத மாணவர்கள், ஆசிரியர் பற்றாக்குறை- என்ன நடவடிக்கை? அமைச்சர் அன்பில் பேட்டி




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண