தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். இந்த நிலையில், அவர் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியது முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் கூச்சலிட்டனர். அவர்களை பேரவைத் தலைவர் பட்ஜெட் உரை முடிந்த பிறகு பேச அனுமதிக்கப்படும் என்றார். ஆனாலும், அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.