நடிகர் விஜய், இன்று தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 


இந்த நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்குள் நுழைந்த விஜய் முதலில் மேடை ஏறினார். பிறகு சட்டெனக் கீழே இறங்கி சான்றிதழ் பெற வந்த மாணவர்களை நோக்கி வந்தார். அப்படி வந்த அவர் முதல் வரிசையில் இருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டார். அப்போது 10 -ஆம் வகுப்பில் தான் படித்த பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவரான கீர்த்தி வர்மா பக்கத்தில் அமர்ந்தார். அப்போது கீர்த்தி வர்மா தான் கொண்டு வந்த ஓவியத்தை விஜய்யிடம் கொடுத்தார். அதனை உடனே பிரித்துப் பார்த்த விஜய், கீர்த்தி வர்மாவிடம் அந்த ஓவியத்தைப் பற்றிக் கேட்டார். அதற்கு கீர்த்தி வர்மா பதில் அளித்ததும் அவரைக் கட்டித் தழுவி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  


பின்னர் மேடையில் உரையாற்றிய பின் நடிகர் விஜய் மாணர்வகளுக்கு உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது மேடைக்கு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வந்த மாணவர்கள் சிலர் விஜய்க்கு போட்டோ பிரேம், ஓவியங்கள் உள்ளிட்டவற்ற பரிசாக கொடுத்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். மாணவர்கள் அன்புடன் அளித்த பரிசுகளை பெற்றுக் கொண்ட நடிகர் விஜய் நெகிழ்ந்து போனார். 


நடிகர் விஜய் அரசியலில் நுழைய ஆயத்தமாகி வருவதாக சமூக வலைதளங்களில் பரவலாக வாதங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்நிகழ்ச்சியில் விஜய் ஆற்றிய உரை அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. 


மேடையில் பேசிய விஜய்,  " நாளைய தலைமுறை வாக்காளர்கள் நீங்கள்தான். நம் கையை வைத்து நம் கண்ணை குத்திக்கொள்வதுதான் தற்போது நடக்கிறது. நீங்கள்தான் வரக் கூடிய நாட்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள். இனி அடுத்தடுத்த தலைவர்களை பார்ப்பீர்கள். அடுத்த தேர்தல்களில் நீங்கள் வாக்களிப்பீர்கள். அப்போது காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் என உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் அவர்கள் கேட்பார்கள். இவ்வாறு பேசினார்.


மேலும் படிக்க 


Senthil Balaji: செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு


Squash World Cup: உலகக்கோப்பை ஸ்குவாஷ் தொடர்.. அரையிறுதியில் இந்திய அணி தோல்வி.. ரசிகர்கள் சோகம்...