உயிர்களை காப்பாற்றும் மருத்துவ படிப்பு பலரின் கனவாக இருக்கிறது. மருத்து படிப்பில் சேர்ந்து சேவையாற்ற வேண்டும் என மாணவர்கள் இரவு, பகல் பாராமல் படித்து வருகின்றனர். இதில் பலருக்கும் வாய்ப்பு எட்டாக்கனியாக இருக்கிறது. தற்போது நீட் தேர்வு சவாலை அதிகப்படுத்தியுள்ளது. முழுமையாக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது ஆறுதலை அளித்தாலும் பல ஏழை, நடுத்தர குடும்பத்தினருக்கும் நீட் ஒரு தடையாகவே இருக்கிறது.




இந்த சூழலில் கடந்த நான்கு ஆண்டுகளாக நீட் தேர்வில் முயற்சித்து வரும் மாணவிக்கு சிறப்பு வாய்ப்பு  வழங்க வேண்டும் என சக மாணவர்களிடம், அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளார் மாணவி ஒருவர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராகவி கடந்த 2018-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார். நடந்து முடிந்த நீட் தேர்வில் 518- மார்க் எடுத்துள்ளார். அவரது தந்தை அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநராக பணி செய்வதால் பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி மருத்துவ கல்லூரி மூலம் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.





ஆனால் கூடுதல் மதிப்பெண்கள் எடுக்கும் மாணவிகள் கூட தங்களது பெற்றோர் போக்குவரத்து துறையில் பணி செய்யும் காரணத்தால் இந்த கோட்டாவை பயன்படுத்துவதாகவும், ஆனால், தன்னைப்போல் ஒரு,சில மதிப்பெண் அளவுகளில் மருத்துவப் படிப்பு கிடைக்காமல் சிரமப்படும் மாணவர்களுக்கு பயன்படும் என தெரிவிக்கிறார்.

 



 

கூடுதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவிகள் ஓபன் கோட்டாவில் தகுதி இருந்தால் அதன் மூலம் மருத்துவ சீட்டை தேர்வு செய்ய வேண்டும் என்கிறார். எனவே அரசு இதில் தலையிட்டு வாய்ப்பை பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.