அதீத கனமழை, வெள்ளம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தண்ணீர் வடிய தொடங்கியுள்ள நிலையில், பொது போக்குவரத்து நாளை முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தென் மாவட்டங்களில் மிரட்டும் மழை:


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. குறிப்பாக நேற்று பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. 


நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக ரயில்நிலையங்களில் தண்ணீர் தேங்கியதால் தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் அதில் பயணித்த பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். கோவில்பட்டி, சாத்தூர், விருதுகர், மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களோடு தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. 






இப்படியான நிலையில் இன்று தென்மாவட்டங்கள் செல்லக்கூடிய ரயில்கள் பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 



  • 12643 - கன்னியாகுமரி முதல் சென்னை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து புறப்படும் 

  • 20636 - கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கோவில்பட்டியில் இருந்து புறப்படும்

  • 20632- நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தோத்யா ரயில் விருதுநகரில் இருந்து புறப்படும் 

  • 06640 - கன்னியாகுமரியில் இருந்து புனலூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் இருந்து புறப்படும்

  • 22658 - நாகர்கோவில் முதல் சென்னை தாம்பரம் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் கோவில்பட்டியில் இருந்து புறப்படும்

  • 12632 - திருநெல்வேலியில் சென்னை செல்லக்கூடிய ரயில் நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து புறப்படும்.  

  • 20605 - திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லக்கூடிய செந்தூர் எக்ஸ்பிரஸ் கோவில்பட்டியில் இருந்து புறப்படும்




மேலும் படிக்க: South TN Rains: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தொடரும் மீட்பு பணி.. பயணிகளை சென்னை அழைத்து வர நடவடிக்கை..