கொரோனா தொற்றின் முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலையில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன. வயது வித்தியாசமின்றி, கிராமம், நகரம் என்ற பாகுபாடின்றி கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாகவே உள்ளது. பொதுமக்களும், பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். சினிமாத்துறையும் கொரோனாவுக்கு பல இழப்புகளை சந்தித்துள்ளது. பாண்டு, இயக்குநர் கே.வி. ஆனந்த், ப்ளோரண்ட் பெரைரா, நெல்லை சிவா என பல இறப்புகளை சந்தித்தது கோலிவுட்.




இந்நிலையில் தொரட்டி படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு கொரோனா தொற்றால் இன்று காலை உயிரிழந்தார். இவர் இயக்குநர் கேவி ஆனந்திடம் ஒளிப்பதிவு உதவியாளராக இருந்தவர். கடந்த ஒரு மாத காலமாக கொரோனா காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷமன் மித்ரு இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மாரிமுத்து இயக்கத்தில் தமிழகத்தின் கிராமத்து வாழ்க்கையை படம்பிடித்து காட்டிய திரைப்படம் 2019ல் வெளியானது. திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டது. மக்களிடையே வரவேற்பை பெற்ற அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் நடிகர் ஷமன் மித்ரு. ஒருகிராமத்து இளைஞராகவே வாழ்ந்து தன்னுடைய நடிப்பு மூலம் பலரையும் கவனிக்க வைத்தார்.


பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!


இதற்கிடையே ஊரடங்கால் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமதிக்க வேண்டுமென திரைத்துறையினர் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள் பல திறக்கப்படும் நிலையில் தங்களது வாழ்வாதாரமும் காக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.




கொரோனா நிலவரத்டை பொருத்தவரை, தமிழ்நாட்டில் கடந்த 24  மணி நேரத்தில் புதிதாக 10,448 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,14,335  ஆக சரிந்துள்ளது. ஒருநாள் கொரோனா இறப்பு எண்ணிக்கை 270. சிகிச்சை முழுமையாகப் பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 21,058ஆக உள்ளது


இதற்கிடையே தமிழ்நாடு மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்ட கொரோனா மரணங்கள் உண்மை எண்ணிக்கையை விடக் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருப்பதாக அண்மையில் அறப்போர் இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கோவை, கரூர், திருப்பூர் மற்றும் வேலூர் என 6 மாவட்ட மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை அரசு செய்திக்குறிப்பில் உள்ளதை விட 13.7 மடங்கு அதிகம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!