15 மாவட்டங்களில் விடுமுறை:

Continues below advertisement


மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி,சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 15  மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்


தென்மேற்கு வங்க கடலில் உள்ள தீவிர "Mandous" புயல் கடந்த 16 மணி நேரத்தில் 14 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னைக்கு தென் கிழக்கே மையம் கொண்டுள்ளது. 


தொலைவு:


இந்த புயலானது, தற்பொழுது ( இரவு சுமார் 9 மணி நிலவரப்படி), மாமல்லபுரத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 110 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா  இடையே, மகாபலிபுரத்துக்கு அருகே இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மேலும் இன்று நள்ளிரவு தொடங்கி, நாளை அதிகாலை வரை, அதிகபட்சமாக 65-75 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 






 


மீனவர்கள் எச்சரிக்கை ; 


இன்று மற்றும் நாளை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரைகள் மற்றும் மன்னார் வளைகுடா, இலங்கைக் கடற்கரையை ஒட்டி பகுதிக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுவரை 12 புயல்:


கடந்த 121 ஆண்டுகளில் சென்னை-புதுச்சேரி இடையே  12 புயல்கள் கரையை கடந்துள்ளன. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் பட்சத்தில் 13வது புயலாகும் என சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


மாண்டஸ் புயல்:


தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று மாலை தீவிரப்புயலாக வலுப்பெற்ற மாண்டஸ் புயல், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08.30 மணியளவில் புயலாக வலு குறைந்தது.


வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரை, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே,  மாமல்லபுரத்தைச் சுற்றி இன்று  நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அவ்வாறு மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது, 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


Also Read: Cyclone Mandous LIVE in Tamil: எந்த மழை, எந்த காற்று வந்தாலும் மக்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது- முதலமைச்சர் ஸ்டாலின்


Also Read: Cyclone Mandous : சென்னையில் இருந்து 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்.. அதிகரிக்கும் வேகம்.. தகவல்கள் உடனுக்குடன்