Cyclone Mandous LIVE: புயல் பாதிப்புகளை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது - வருவாய்த்துறை அமைச்சர்
Cyclone Mandous LIVE in Tamil: Cyclone Mandous LIVE: மாண்டஸ் புயல் முழுமையாக கரையைக் கடந்தது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்துகிறார்.
தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை பெய்து வருவதால், அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 10,600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 15,600 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 15,600 கன அடியாக அதிகரித்துள்ளது.
தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை பெய்து வருவதால், அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 10,600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 15,600 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 15,600 கன அடியாக அதிகரித்துள்ளது.
தாம்பரத்தில் 250 வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. இந்தப் பகுதிகளில் 5 மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றி வருவதாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தகவல் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் செம்பாக்கத்தில் சுமார் 250 வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளிவர முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.செம்ப்பாக்கம், திருமலை நகர், வள்ளல் யூசுப்நகர் உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவிற்கு நீர் தேங்கியுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக பெய்த கனமழையில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தின் வெம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னை திருவான்மியூர் பகுதியில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலில் நேரில் பார்வையிட்டு வருகிறார்.
மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்!
நேற்று மகாபலிபுரம் அருகே புயல் கரையை கடந்த நிலையில், இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா பூங்கா செயல்படாது என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் மொத்தம் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
புயல் பாதிப்புகளை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ஆர். ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இன்றும் 19 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகும் கிழக்கு கடற்கரை சாலையில் பலத்த காற்று வீசி வருகிறது.
அடுத்த மூன்று மணி நேரத்துக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், பெரம்பலூர், உள்ளிட்ட 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ம்காலை 9.30 மணி வரை மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையைக் கடந்த மாண்டஸ் புயலால் சென்னை, காசிமேட்டில் 150 படகுகள் சேதமாகின. 3 படகுகள் கடலில் மூழ்கின.
நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி கரையேறிய நிலையில், சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் குறைந்தது. அதிகபட்சமாக காட்டுப்பாக்கத்தில் 16 செ.மீ மழையும், சென்னை, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி பகுதிகளில் தலா 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
வட தமிழகக் கடலோரப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து இன்று நண்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணிநேரத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட 20 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணிநேரத்துக்கு மிதமானமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பிற்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாண்டஸ் வலுவிழக்கும் - வானிலை மையம்
மாண்டஸ் புயலால் உள் மாவட்டங்களில் மழை தொடரும் - வானிலை மையம்
கரையைக் கடந்தது மாண்டஸ் புயல் - வானிலை மையம்
2 முதல் 3 மணிநேரத்தில் புயல் கரையைக் கடக்கலாம் - பாலசந்திரன்
மாண்டஸ் புயல் 12 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்து வருகிறது
சென்னை அருகே 100 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயலின் மையப்பகுதி உள்ளது
மாண்டஸ் புயலில் வெளிப்புறப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது
மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் தரைக்காற்றானது, 50 கி.மீ முதல் 60கி.மீ வரை வீசிக் கொண்டிருக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது நாளை காலை வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மாண்டஸ் புயல் தமிழ்நாடு கடற்கரையை நெருங்கும் நிலையில், மழையின் முப்பரிமான படங்களை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
கன மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் அண்ணா நகர் மேற்கு உள்ளிட்ட சில இடங்களில் மின் தடை செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்: புயல் காரணமாக 10 மணிமுதல் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது - மாவட்ட ஆட்சியர்
மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ஆபத்தான கட்டடங்களில் இருப்பவர்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் - மேயர் பிரியா
மாண்டஸ் புயல் காரணமாக, அலைகளால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை ஆய்வு மேற்கொண்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள், விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்தனர்.
சில மணி நேரங்களில் கரையைக் கடக்கும் புயல், தயார் நிலையில் மின்சார வாரியம்
செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரத்தில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மின்சார வாரியம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு, துணை மின் நிலையம் பகுதிகளிலும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து காற்றின் வேகம் குறித்தும், கண்காணிக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக 150 மின்மாற்றிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில், 85 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு
மாண்டஸ் புயல் மகாபலிபுரம் அருகே இரவு கரையை கடக்க உள்ள நிலையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியில் தமிழக காவல்துறையினர் வாகனங்களை தடை செய்து திருப்பி விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நோக்கி செல்லும் பேருந்துகள் புதுச்சேரி மற்றும் கோட்டக்குப்பத்தில் நிறுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மாண்டஸ் புயல் மகாபலிபுரம் அருகே இரவு கரையை கடக்க உள்ள நிலையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியில் தமிழக காவல்துறையினர் வாகனங்களை தடை செய்து திருப்பி விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நோக்கி செல்லும் பேருந்துகள் புதுச்சேரி மற்றும் கோட்டக்குப்பத்தில் நிறுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
புயல் கரையை கடக்கவுள்ள நிலையில், மின்சாரத்துறை தயார் நிலையில் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை மின் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.
மாமல்லபுரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிப்பு
புயல் தொடர்பாக, சென்னை- பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார் . பின் செய்தியாளர்களிடம் எந்த மழை, எந்த காற்று வந்தாலும் மக்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாளை (10.12.2022) பள்ளிகள், கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் இஆப, அவர்கள் அறிவித்துள்ளார்.
தருமபுரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் எதிரொலியாக திருப்பதி திருமலையில் கனமழை பெய்து வருகிறது.
மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில், பேரிடர் மேலாலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்
மாண்டஸ் புயல் காரணமாக, கோடியக்கரையில் சுமார் 200 அடி வரை கடல் உள்வாங்கியுள்ளது
மாண்டஸ் புயலானது, தற்பொழுது மாமல்லபுரத்தில் இருந்து 135 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 170 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள்ளக்குறிச்சியிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிப்புகள் ஏற்பட்டால் சரிசெய்ய மின்வாரியம் சார்பில் 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புயல் காரணமாக, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேலும், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, மைசூர், விஜயவாடா, கடப்பா செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மாண்டஸ் புயல் முன் எச்சரிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மாண்டஸ் புயல் முன் எச்சரிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்
மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
6 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று அரசுப்பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
நாளை விழுப்புரம் கள்ளக்குறிச்சி சேலம் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் தீவிர புயல் இன்று காலை வலு இழந்து தற்போது சென்னையில் தெற்கு கிழக்கு 260 கிலோமீட்டர் தொலைவிலும் இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பகுதியில் மாமல்லபுரத்தில் ஒட்டி கரையை கடக்க கூடும்.
சென்னை, திருவள்ளூரில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அறிவித்துள்ளார்.
மாண்டஸ் புயல் காரணமாக 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் அந்த மாநில முதலமைச்சர் ரங்கசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த தீவிர புயல் "Mandous" புயலாக வலு இழந்துள்ளது. இது கடந்த 06 மணி நேரத்தில் 12 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
காரைக்காலில் இருந்து கிழக்கு - வட கிழக்கு திசையில் 180 கி.மீ தொலைவில் உள்ளது, மற்றும் சென்னைக்கு தென்-தென்கிழக்கே சுமார் 260 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை கடல்நீர் சூழ்ந்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் திடீரென 10 அடி தொலைவிற்கு கடல் உள்வாங்கியது.
மாண்டஸ் தீவிர புயலாக இருந்த நிலையில் தற்போது புயலாக வழு இழந்தது. கடந்த ஆறு மணி நேரத்தில் 12 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது
மாண்டஸ் புயல் காரணமாக பேருந்துகள் இயங்காது என்று கூறப்பட்ட நிலையில், இன்று இரவு ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிர புயல் வலுகுறைந்து புயலாக மாறியுள்ளது.
மாண்டஸ் புயல் சென்னைக்கு தெற்கு தென் கிழக்கு பகுதியில் 260 கி.மீ தொலைவில் உள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் 12 கிலோமீட்டர் வேகத்தை வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.
சென்னையில் நுங்கம்பாக்கம், மாதவரத்தில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
பொதுமக்கள் கவனத்திற்கு: மாண்டஸ் புயலின் காரணமாகக் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னை, மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் மூடப்படும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் மற்றும் வட தமிழக கடலோர இடங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை வட தமிழகம் மற்றும் ஹயாலசீமாவில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையுடன் கூடிய பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது அடுத்த 03 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளது இது கிட்டத்தட்ட வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மகாபலிபுரத்தைச் சுற்றி ஒரு சூறாவளி புயலாக இன்று நள்ளிரவில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் மணிக்கு 65-75 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
பாம்பன் துறைமுகத்தில் வீசி வரும் பலத்த சூறைக்காற்றால் படகுகள் மிக கடுமையாக சேதம் அடைந்துள்ளன.
சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் 13 கிலோமீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து கொண்டு வருகிறது
மாண்டஸ் புயல் எதிர்கொள்ள கடலோர காவல்படை தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கடலோர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில நிர்வாகம் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி மீன்பிடி படகுகளை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்புகின்றன
சென்னையில் இருந்து 200 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்னும் 3 மணிநேரத்தில் புயலாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரியிலிருந்து நண்பகல் 12 மணிக்கு 100 கன அடி நீர்வெளியேற்றப்பட உள்ளதால், பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயலின் வேகம் 15 கி.மீ. வேகத்தில் இருந்து 12 கி.மீ. வேகத்திற்கு குறைந்துள்ளதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் தற்போது தீவிர புயலாக இருக்கும் நிலையில் இன்று மாலை வரையும் அதன் தீவிரத்தை தக்க வைத்துய் அதன் பிறகு புயலாக வலுவிழந்து கரையை கடக்க தொடங்கும். அதன் பின் புயலாகவே இருந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து முழுவதுமாக கரையை கடக்கும்
கறையை கடக்க தொடங்கும் பொழுது காற்றின் வேகம் என்பது 75 ல் இருந்து 80 கி.மீ வேகத்திலும் இடையே 100 கி.மீ வேகத்தில் இருக்கும்
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, மெரினாவில் கடல் வழக்கத்தை விட அதிகமான சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் புயல் மற்றும் வானிலை மாற்றம் காரணமாக இன்று 9.12.22 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்
தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்க கடலில் சென்னைக்கு 320 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் தீவிர புயல் நிலை கொண்டுள்ளது
இது அடுத்த 06 மணித்தியாலங்களில் தீவிரமான புயலின் தீவிரத்தை தக்கவைத்து அதன் பின்னர் படிப்படியாக வலுவிழந்து சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழையும் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக இன்று மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை
செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் ஒரு சில இடங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மாண்டஸ் புயல் காரணமாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னையில் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கறையை கடக்க தொடங்கும் பொழுது காற்றின் வேகம் என்பது 75 ல் இருந்து 80 கி.மீ வேகத்திலும் இடையே 100 கி.மீ வேகத்தில் இருக்கும். அதன் பிறகு காற்றின் வேகம் 70 லிருந்து 80 தாக குறைந்து படிப்படியாக 65 லிருந்து 75 கி.மீட்டர் வேகத்திலும்,
அதன் பிறகு முழுமையாக கரையை கடக்கும் பொழுது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் பொழுது 40லிருந்து 50 கிலோமீட்டர் வேகத்திற்கும் இடையே 60 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மாண்டஸ் புயல் தற்போது தீவிர புயலாக இருக்கும் நிலையில் இன்று மாலை வரையும் அதன் தீவிரத்தை தக்க வைத்துய் அதன் பிறகு புயலாக வலுவிழந்து கரையை கடக்க தொடங்கும். அதன் பின் புயலாகவே இருந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து முழுவதுமாக கரையை கடக்கும்.
கனமழை முன்னெச்சரிக்கையொட்டி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை,விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாகை, திருவண்ணாமலை, திருச்சி, தருமபுரி, நாகை,சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய 24 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கனமழை முன்னெச்சரிக்கையொட்டி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை,விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாகை, திருவண்ணாமலை, திருச்சி, தருமபுரி ஆகிய 21 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
புயல் எச்சரிக்கையொட்டி, சென்னையில் உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களை நாளை முதல் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தீவிர புயலாக வலுப்பெற்றது மாண்டஸ்..! மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது புயல்..!
நாளை நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு - தொழில்நுட்ப கல்வி இயக்ககம்
மாண்டஸ் புயல் நகர்வு குறித்த EOS-06 செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை, இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
திருவாரூரிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூரில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..
Anna University Exams : நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு
கனமழை முன்னெச்சரிக்கையாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை(09.12.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
நாளை (9-12-22) புயல் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவிப்பு.
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டதாக திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
மகாபலிபுரம் அருகே புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டு மகாபலிபுரத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் 40க்கும் மேற்பட்டோர் வருகை.
சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
மாண்டஸ் புயல் நகரும் வேகம் 12 கி.மீ ஆக அதிகரிப்பு.. மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கணிப்பு..
மாண்டஸ் புயல் கரையை நெருங்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று மதியம் 3 மணிக்கு தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
நாளை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மற்றும் தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள "மாண்டஸ்" புயல் கடந்த 06 மணிநேரங்களில் 11 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்தது, சுமார் 300 கி.மீ தொலைவில் திருகோணமலைக்கும், யாழ்ப்பாணத்திற்கு கிழக்கு-வடகிழக்கு, சுமார் 420 கி.மீ காரைக்காலில் இருந்து கிழக்கு- தென்கிழக்கு, சுமார் 460 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கு. 550 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையை கடந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு இடையே புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா மாகாணத்திற்கு இடையே நகரும்.
நாளை நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மாலை 5.30 மணி அளவில் இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மீனவர்கள் டிசம்பர் 8 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல், டிசம்பர் 10 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலுக்கும்,
டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் இலங்கை கடல்கறை, தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
டிசம்பர் 08-10 தேதிகளில் ஆந்திரா கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கரைக்குத் திரும்ப வேண்டும் அல்லது கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை காரண்மாக இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி - ஸ்ரீஹரிக்கோட்ட பகுதியில் நாளை நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை அதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, திருவரங்கம், நாகவுப்பட்டி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவரங்கம், திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் அடுத்த ஒரு மணி நேரத்தில் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து 580 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது.
இதனால் சென்னையில் கோடம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கோயம்பேடு, பட்டினப்பாக்கம், கிண்டி, வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது
சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுருத்தல்
கன மழை எச்சரிக்கை காரணமாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் சீர்காழிக்கு விரைந்தனர்.
சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். படகு, கயிறு, மர அறுவை இயந்திரமும் தயார் நிலையில் உள்ளது
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதியில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கும்,
நீலகிரி, கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “மாண்டஸ்” புயல் கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை 0230 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடலில் அமைந்தது.
இது காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 530 கீ.மி மற்றும் சென்னைக்கு தென்கிழக்கே 620 கீ.மி தொலைவில் உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் டிசம்பர் 9 நள்ளிரவில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் அதிகபட்சமாக 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 3 துறைமுகங்களில் இரண்டு மற்றும் நான்கு புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
எண்ணூர், தூத்துக்குடி, பாம்பன் உள்ளிட்ட ஆறு துறைமுகங்களில் இரண்டாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
2 ஆம் எச்சரிக்கை கூண்டு புயல் உருவாகி உள்ளது என்பதை குறிக்கிறது அதேவேளையில் நான்காம் எண் துறைமுகம் மற்றும் கடல் பகுதிகள் சுற்றியுள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை செய்வது ஆகும்
கனமழை எச்சரிக்கையால், தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை ( டிச.08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
கனமழை எச்சரிக்கையால், திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புயல் உருவாவதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆட்சியர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றாழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறவுள்ள நிலையில் மீனவர்கள் உடனடியாக கரைக்க திரும்புமாறு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
இன்று காலை 15 கி.மீ வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 16 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழக- புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வட இலங்கை கடலோரப்பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர்,திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிமை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று மாலை உருவாகும் மாண்டஸ் புயலானது, புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
8, 9, 10 ஆகிய தேதிகளில் கடல் நிலை தமிழக கடற்கரையில் உள்ள பகுதியில் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் 10 தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுருத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மட்டும் புறநகர் சென்னை பொறுத்த வரையிலும் 9, 10 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் இந்த புயல் புதுச்சேரி ஸ்ரீஹரி கோட்டாக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று (07.12.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 08-09-ம் தேதிகளில் வடதமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும்.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
Background
Cyclone Mandous LIVE Updates:
நேற்று (06.12.2022) தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று (07.12.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 08-09-ம் தேதிகளில் வடதமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும்.
07.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
09.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
10.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -