வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று எதிர்பார்த்த நிலையில், காற்று உந்துதல் காரணமாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவில்லை. ஆனாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் மிககனமழை பெய்யும் என்று அறிவித்தது.


இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.




கனமழை அபாயம் காரணமாக சென்னை, விழுப்புரம், தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களிலும் சாலைகளில் தண்ணீர் வெள்ளபோல சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.




சென்னையில் நேற்று இரவு முதல் பெய்யத்தொடங்கிய மழை நள்ளிரவில் கனமழையாக பல பகுதிகளிலும் கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து சென்னையில் தற்போது வரை கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், சென்னைவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


மேலும் பல்வேறு செய்திகளை படிக்க : Morning Headlines: 22 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...! 3 மாவட்டங்களில் மிக கனமழை அபாயம்..! முக்கியச்செய்திகள் இங்கே


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண