ஓடும் ரயிலில் சாகசம்: மாணவி மற்றும் மாணவனை அழைத்து அட்வைஸ் கொடுத்த எஸ்பி!

அவர்களின் எதிர்கால கனவு குறித்து அவர்கள் கேட்கையில் டிஎஸ்பி ஆக வேண்டுமென அந்த மாணவரும், ஐபிஎஸ் ஆக வேண்டுமென அந்த மாணவியும் தெரிவித்தனர்.

Continues below advertisement

கல்லூரி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் ஓடும் ரயிலில் ஏறுவது, வேகமாக ரயில் செல்கையில் தங்களது கால்களை நடைமேடையில் தேய்ப்பது என ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள்.

Continues below advertisement

இது தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது வெளியாகும். அதுமட்டுமின்றி இதுபோன்ற பயணம் செய்பவர்களுக்கு பலர் தங்களது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்துவருகின்றனர்.

இதுவரை மாணவர்கள் மட்டுமே செய்துவந்த இதுபோன்ற செயலை தற்போது மாணவி ஒருவரும் செய்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அடுத்த கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் நேரத்தில் பள்ளி சீருடையில் ஓடி வந்த ஒரு மாணவி வேகமாக நகரும் ரயிலில் ஏறினார்.

ஓடும் ரயிலில் ஏறியது மட்டுமின்றி ரயில் சென்றுகொண்டிருக்கும்போது தனது காலை நடை மேடையில் வைத்து உரசியபடி சென்றார். அவரைப் போலவே பள்ளி சீருடையில் வந்த மாணவர் ஒருவரும் செய்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி கண்டனத்தை பெற்றது.

 

இந்நிலையில் சம்மந்தப்பட்ட அந்த மாணவர் மற்றும் மாணவியை அவர்களது பெற்றார்களுடன் காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து அறிவுரை வழங்கினார்.  அப்போது அவர்களின் எதிர்கால கனவு குறித்து அவர்கள் கேட்கையில் டிஎஸ்பி ஆக வேண்டுமென அந்த மாணவரும், ஐபிஎஸ் ஆக வேண்டுமென அந்த மாணவியும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Maanaadu Review : ’வந்தான், வென்றான், சிம்புமாநாடு படம் எப்படி இருக்கு..?

Nilgiris New Collector: நீலகிரி கலெக்டராக அம்ரித் நியமனம்... சுற்றுச்சூழலை பாதுகாத்த இன்னசென்ட் திவ்யாவிற்கு மாற்று!

Red Alert: தூத்துக்குடி, நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்': வேறு எங்கெல்லாம் மழை கொட்டும்?

Continues below advertisement
Sponsored Links by Taboola