தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் இன்று சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூட்டத்தில் டிவி எடுக்க கிராம சங்க பால் கொள்முதல் அளவை குறையாமல் பார்த்துக் கொள்வதுடன் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறையாமல் காத்திட வேண்டும். அண்டை மாநிலங்களில் கூட்டுறவாளர்களுக்கு வழங்குவது போல் ஊக்கத் தொகை வழங்க அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் லிட்டருக்கு ரூபாய் 42 மற்றும் எருமைப்பால் லிட்டருக்கு ரூபாய் 51ம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


மேலும் படிக்க: Lok Sabha Election 2024: பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் ஏன் இருக்கக்கூடாது? - போட்டுத்தாக்கிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக்



கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறும்போது, ”தனியார் நிறுவனங்கள் தமிழகத்தில் குறைந்த விலைக்கு பாலை கொள்முதல் செய்து வெளி மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்கின்றனர். இதில் பால் உற்பத்தியாளர்கள் எந்த பலனும் இல்லை. தனியார் நிறுவனங்களின் நடவடிக்கையால் ஆவினுக்கு வரக்கூடிய பாலின் அளவு சுமார் 5 லட்சம் லிட்டர் வரை குறைந்துவிட்டது. அண்டை மாநிலங்களில் அரசு பாலுக்கு அதிக அளவில் கொள்முதல் விலை கொடுக்கிறது. எனவே பால் கொள்முதல் விலை உயர்வு உள்பட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் மீது வரும் பத்தாம் தேதிக்குள் தமிழக அரசு தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர் சங்கங்களின் முன்பு கருப்பு கொடி ஏற்றப்பட்டு, பால் உற்பத்தியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்வார்கள். தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும் அறவழிப் போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வரும்  17 ஆம் தேதி கறவை மாடுகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் சாலை மறியல் மற்றும் தொடர் பால் விற்பனை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” எனக் கூறினார்.


மேலும் படிக்க: "திமுக உடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்" - அன்புமணி ராமதாஸ்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண