மார்ச் 1ஆம் தேதியான இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் , கி. வீரமணி, உள்ளிட்ட தமிழக தலைவர்களும் பிற மாநில தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நேரிலும் , அலைபேசி வாயிலாகவும், காணொளி வாயிலாகவும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.


 




இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக  கரூர் மாவட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி  ஏற்பாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா பல்வேறு இடங்களில் திமுக கொடி ஏற்றிய நிகழ்ச்சி, அதைத்தொடர்ந்து அன்னதானம் நலத்திட்ட உதவி என பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிலையில்,


 




கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் வழிகாட்டுதல்படி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு 70 தபால் அட்டை தயாரித்து அதனை தபால் மூலம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை அனுப்பிய நிகழ்வு பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை விழாவை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து பல்வேறு நாட்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கரூர் மாவட்ட திமுக சார்பாக விழாவாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 


 




கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனையொட்டி தொட்டியப்பட்டி அரசு பள்ளி மாணவ மாணவிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தமிழக முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, 70 தபால் அட்டைகள் தயாரித்து அதில் தங்களது வாழ்த்துகளை அனுப்பி வைத்துள்ளனர். 


 


 


 




தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பழமை மாறாமல் கரூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் தபால் அட்டை மூலம் வாழ்த்து அனுப்பிய சுவாரசிய நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.