நாளை முழு ஊரடங்கில் உணவகங்கள் வீடு தேடி உணவு வழங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அன்று ஆன்லைன் உணவு டெலிவரிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், தமிழ்நாட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கின்போது உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு சென்று டெலிவரி செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது. மின்னணு வர்த்தக விநியோகம் மட்டுமின்றி சொந்த விநியோக முறையில் உணவகங்கள் டெலிவரி செய்யலாம், வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு உணவகம் மூலமாக நேரடியாக உணவு வழங்கப்படுவதற்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.Immunity Tea | அதிகமா சளி பிடிக்குதா? நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் இலவங்கப்பட்டை - தேன் டீ.. 5 நிமிஷத்துல ரெடி பண்ணலாம்




முன்னதாக, முழு ஊரடங்கின்போது திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்ல தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது. திருமண அழைப்பிதழை காண்பித்து தங்களின் பயணங்களை மேற்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும், திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Traditional Foods | பாரம்பரிய உணவுகள் எவ்வளவு முக்கியமானது? அறிவுறுத்தும் அமெரிக்க வேளாண்மை அமைப்பு


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.  74 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண