ஆரோக்கியமாக உண்பது என்பது சில நேரங்களில் மிகவும் கடினமான பணிகளுள் ஒன்று. உடலுக்கு நலம் தரும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் ஐரோப்பியர்களின் பாணியில் உடலைக் கட்டுப்படுத்துவதை ஊக்குவிக்கிறது ஆரோக்கியமான உணவுப் பழக்கம். 


கரீபியன் தீவுப் பகுதிகளில் பின்பற்றப்படும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் அமெரிக்காவின் வழக்கமான உணவுப் பழக்கத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலமாக, எளிய மக்களின் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் அனைவருக்குமானதாக மாற்றப்படுகின்றது.


எனினும், சத்தான உணவுகளும், ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் மட்டுமே உடல்நலத்திற்கு வலுசேர்ப்பவை அல்ல. பாரம்பரிய உணவுகளும், உணவுக் கலாச்சாரமும் உடல்நலனிற்கு வலுசேர்க்கும் ஒன்று. இங்கு நாம் பாரம்பரிய உணவுகள் ஏன் உடல்நலத்திற்குத் தேவையானவை என்பதைப் பார்க்கவுள்ளோம். 



பாரம்பரிய உணவுகள் ஒரு புவியியல் நிலப்பரப்பின், இனக் குழுவின், மதக் குழுவின், பன்முக கலாச்சாரச் சமூகத்தின் பாரம்பரியங்கள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் உணவு வகைகள் ஆகும். 


கலாச்சார உணவுகள் தயாரிப்பதற்கும், உண்பதற்கும் பின்னணியில் சில நம்பிக்கைகள் இடம்பெற்றிருக்கும். சில சமயங்களில் ஒரு குழுவின் மொத்த கலாச்சாரத்தையும் இவை பிரதிபலிப்பவையாக இருக்கலாம். 


மேலும், பாரம்பரிய உணவுப் பழக்கங்கள் ஒரு தலைமுறையிடம் இருந்து மற்றொரு தலைமுறைக்குத் தொடர்ந்து கடத்தப்படுவதாகவும் இருக்கும். மதப் பண்டிகைகளின் போதோ, இனம் குறித்த பண்டிகைகளின் போதோ, கலாச்சார உணவுகளுக்கு மிக முக்கிய இடம் வழங்கப்படும். மேலும் அவை அந்தந்த மக்களின் அடையாளம், குடும்ப முறை ஆகியவற்றோடு நேரடியாகத் தொடர்பில் இருப்பவையாகவும் இருக்கும். 



கலாச்சார உணவுகளை வழக்கமாக உண்ணும் பழக்கத்தோடு இணைக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டாலும், அது பின்பற்றப்படுவதில்லை. 


அமெரிக்கர்களுக்கான அமெரிக்க விவசாயத்துறையின் உணவுப் பழக்க வழிமுறைகள் மேற்கத்திய நாடுகளில் பலராலும் பின்பற்றப்படும் வழக்கமாக இருக்கின்றன. இந்த வழிமுறைகள் தற்போது மக்களை அவர்கள் வாழும் இடத்திலேயே அவரவர் கலாச்சாரத்தின் அடிப்படையிலான உணவு வகைகளை உண்பதற்காக வலியுறுத்துகிறது. 


கனடா நாட்டின் உணவு வழிகாட்டியும் கலாச்சாரம், உணவுப் பழக்கங்கள் ஆகியவை ஆரோக்கியமான உணவு முறைக்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்தவை என்பதை வலியுறுத்துகின்றன. 


ஆரோக்கியமான உணவுமுறை என்பது ஒவ்வொரு நாளும் பால், புரதம், பயிறுகள், பழங்கள், காய்கள் ஆகியவற்றில் இருந்து வெவ்வேறு வகையிலான ஊட்டச்சத்துகளை அளிப்பதாக இருப்பது ஆகும். பாரம்பரியமாக கலாச்சார அடிப்படையில் நாம் உண்ணும் உணவு வகைகளில் பெரும்பாலும் இவற்றில் இருந்தே தயாரிக்கப்படுவதோடு, அவற்றிலும் வெவ்வேறு வகையிலான ஊட்டச்சத்துகள் நமக்கு கிடைக்கின்றன.  மேலும் நாம் வழக்கமாக உண்பதைப் போல ஒரு உணவு வகையில் ஒரு வகையான ஊட்டச்சத்துகள் என்று இல்லாமல், ஒரே உணவில் பல்வேறு வகையிலான ஊட்டச்சத்துகள் கலாச்சார உணவு வகைகளில் கிடைப்பது போல தயாரிக்கப்படுகின்றன.