கோவிட் தொற்று உலகம் முழுவதும் உடல்நலம், நோய் எதிர்ப்பு முதலானவற்றைப் பிரதானப்படுத்தியுள்ளது. பல்வேறு வர்த்தக நிறுவனங்களும், அமைப்புகளும் நோய் எதிர்ப்பை முன்னிலைப்படுத்தும் உணவு வழிமுறைகளை அறிவுறுத்தி வருகின்றன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உடல் ஆரோக்கியத்திற்காக வீட்டு வைத்தியமும், இயல்பாக உண்ணப்படும் உணவுப் பழக்கமும் நமக்குக் கைகொடுக்கின்றன. வீட்டில் எப்போதும் இருக்கும் இலவங்கப் பட்டையும், தேனும் மனித உடலுக்குப் பல்வேறு நலன்களை ஏற்படுத்தும் குணம் கொண்டவை. இவற்றால் செய்யப்படும் தேநீர் உடல் நலனுக்கும், நோய் எதிர்ப்புக்கும் பயன்படுவதோடு, சளி, காய்ச்சல் முதலானவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. 


தேன், இலவங்கப் பட்டை - இரண்டிலும் நோயைக் குணப்படுத்தும் பல்வேறு நற்குணங்கள் நிரம்பியுள்ளன. தேன் உண்பதன் மூலம் உடலில் உள்ள நோய்கள் சரியாவதோடு, அழியும் நிலையில் உள்ள செல்கள் குணமாகின்றன. இலவங்கப் பட்டையும் உடலைச் சரி செய்வதற்கான பல்வேறு ஊட்டச்சத்துகள் நிரம்பியதாக உள்ளது. 



இந்த இரண்டு பொருள்களும் இணையும் போது, அவை அலர்ஜிகளுக்கு எதிராகவும், உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வாகவும் அமைகின்றன. பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சில்பா அரோரா இதுகுறித்து கூறிய போது, `தேனும், இலவங்கப் பட்டையும் அலர்ஜிகளுக்கு எதிராக செயல்படுவதோடு, நோய் எதிர்ப்பை வலுப்படுத்துகின்றன. மேலும் மலச்சிக்கலைத் தீர்ப்பதிலும் இவற்றிற்குப் பெரும் பங்குண்டு’ என்கிறார். எனவே இலவங்கப் பட்டையும் தேனும் சேர்க்கப்பட்ட தேநீர் உடல் நலனுக்குப் பெரிதும் பயன்படுகிறது. 


மிக சுலபமாக செய்யக் கூடிய இந்த தேநீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். 


தேவையானப் பொருள்கள்:


1/4 டீஸ்பூன் இலவங்கப் பட்டைத் தூள்
1 டீஸ்பூன் தேன்
1 கப் தண்ணீர்



செய்முறை:
1. முதலில் தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து இலவங்கப் பட்டைத் தூளைச் சேர்த்து, நன்கு கலக்கிவிடவும்.
2. அடுத்த 2 முதல் 3 நிமிடங்களில் தண்ணீரின் கொதிப்பு அடங்குமாறு செய்ய வேண்டும். 
3. இதனை ஒரு கப்பில் ஊற்றி, அதனோடு தேன் சேர்த்து, சற்றே சூடு ஆறியவுடன் பருகலாம். 


இந்த வகையான தேநீர் நல்ல உடல் நலனுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும் பயன்படுகிறது. 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 பேஸ்புக் பக்கத்தில் தொடர


 ட்விட்டர் பக்கத்தில் தொடர


 யூடியூபில் வீடியோக்களை காண