நடிகர் ரஜினிகாந்த் தனது மருத்துவ சிசிச்சைக்காக நாளை மறுநாள் அமெரிக்கா செல்கிறார். ஹைதராபாத்தில் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு கடந்த மாதம் சென்னை திரும்பிய ரஜினிகாந்த், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.


இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு ரஜினிகாந்த் பேட்டியளித்தார். அப்போது, கொரோனாவை ஒழிக்க தமிழக அரசின் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!


இந்நிலையில், தனது மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளார். தனுஷின் ஹாலிவுட் படப்பிடிப்பு அங்கே நடந்து வருவதால், மகள் ஐஸ்வர்யா, ரஜினியுடன் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. குறைந்தது ஒருமாதம் முதல் மூன்று மாத காலம் அங்கு தங்கி ஓய்வெடுக்க ரஜினி முடிவு செய்துள்ளாராம். ரஜினிகாந்த் திரும்பிய பின்னரே ‘அண்ணாத்த’  டப்பிங் பணிகளை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.




முன்னதாக, ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்வதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்ததாகவும், இது தொடர்பாக இரண்டு மத்திய அமைச்சர்களிடம் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. அதில், ஒரு அமைச்சர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அவரிடம் ரஜினி தமிழிலேயே பேசியதாகவும் சொல்லப்படுகிறது. 


14 பேர் வரை பயணிக்கும் வசதி கொண்ட அந்த சிறப்பு தனி விமானத்தில், ரஜினி அவரின் குடும்பத்தினரையும் அழைத்து செல்ல உள்ளதாகவும், ரஜினியின் தனி விமானப் பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. 


2020 டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் இருக்கும்போது ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும்  கூறப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனையில் கொரோனா இல்லை என்று உறுதியானது. ஆனால், அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுதல்கள் ஏற்பட்டதால் அங்குள்ள அப்போலா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்தவுடன் சென்னை திரும்பினார். இதனைத்தொடர்ந்து, தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்றும் அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.


சமீபத்தில், ஹைதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பின்போது தனது நீண்ட கால நண்பரும் தெலுங்கு முன்னணி நடிகருமான மோகன்பாபுவை ரஜினிகாந்த் சந்தித்திருக்கிறார். அப்போது நடந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?