பப்ஜி மதனுக்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்க லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்த நிலையில் புழல் சிறை உதவி ஜெயிலர் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 


பப்ஜி மதனுக்கு சிறையில் வசதிகள் செய்துத் தர அவரது மனைவி கிருத்திகாவிடம் அதிகாரி செல்வம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து, மதனுக்கு சிறையில் வசதி செய்து தர கிருத்திகாவிடம் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பான ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக புழல் சிறையின் உதவி ஜெயிலர் செல்வத்தை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் உத்தரவிட்டார்.


 






முன்னதாக, சிறையில் இருக்கும் பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் செய்து தர சிறைத் துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் மதனின் மனைவி சிறைத்துறை காவலர் ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் கூகுள் பே மூலம் பணப்பரிவர்த்தனை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள ஆடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக சிறை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


முன்னதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதன் மற்றும் அவரது மனைவி மீதான குற்றப்பத்திரிகையை  தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் மொத்தம் 600 பக்கங்கள் இடம்பெற்றுள்ளது. மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதான வழக்கில் மொத்தம் 32 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பப்ஜி மதன் மீது மொத்தம் 150-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தநிலையில், மொத்தம் 32 பேர் மட்டும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.


இதுமட்டுமின்றி, கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்வதாக கூறி ரூபாய் 2 ஆயிரத்து 848 நபர்களிடம் ரூபாய் 2 கோடியே 89 லட்சம் ரூபாய் பணமோசடி செய்ததாகவும் காவல்துறை தரப்பில் மதன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் மதனின் மனைவி கிருத்திகா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக, பப்ஜி விளையாட்டில் சிறப்பாக ஆடிவந்த மதன் மற்ற சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பப்ஜி விளையாட்டை கற்றுத் தந்துள்ளனர். பின்னர், அப்போது பெண்களிடமும், சிறுவர்களிடமும் மிகவும் ஆபாசமாக பேசியுள்ளார். அந்த ஆபாச பேச்சை தனது யூ டியூப் தொலைக்காட்சியிலும் வீடியோவாக தொடர்ச்சியாக வெளியிட்டு வந்துள்ளார். இதையடுத்து, பலரும் மதனுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.  சிலர் மதனுக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் பலரும் மதன் மீது புகார் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் மதனை கைது செய்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண