டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை அதிகரிக்க உள்ளது. புதிய விலையின் படி

குவாட்டர் - ரூ.10 முதல் ரூ.20 விலை உயர்வு

ஆஃப் - ரூ.20 முதல் ரூ.40 வரை விலை உயர்வு

ஃபுல் - ரூ.40 முதல் ரூ.80 வரை விலை உயர்வு

என்கிற விகிதத்தில் விலை உயர்வு செய்யப்பட உள்ளது. சமீபமாக டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு என்பது அடிக்கடி ஏற்படுகிறது. கொரோனா ஊரடங்கிற்குப் பின் டாஸ்மாக் கடைகளை திறந்த போது, அன்றைய அதிமுக அரசு கடைசியாக டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்தியது. தற்போது திமுக அரசு பொறுப்பேற்ற பின், ஓராண்டு நிறைவு செய்வதற்குள் தற்போது டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளது. அரசு ஒருபுறம்  விலை ஏற்றத்தை அறிவித்தாலும், பொதுவாகவே டாஸ்மாக் கடைகளில் குவாட்டருக்கு 5 முதல் 10 ரூபாய் அதிக விலை வைத்தே விற்கப்படுகிறது. பீர் வகைகளுக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது. இவை அனைத்தும் வெளிப்படையாகவே டாஸ்மாக் ஊழியர்கள் வசூலித்து வருகின்றனர். இதுவரை அதை கட்டுப்படுத்தவோ அல்லது, முறையான பில் வழங்கவோ அரசு தரப்பில், அது எந்த அரசாக இருந்தாலும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் விலை ஏற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. 

உண்மையில் அரசு கொள்முதல் செய்யும் செலவிற்கும், விற்பனையாகும் விலைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. கடந்த 2019 இறுதியில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அரசு தரப்பு கொள்முதல் செய்யும் விலைக்கும், விற்கப்படும் விலைக்குமான வித்தியாசத்தை பார்த்தால், இரட்டிப்பு விலையாக உள்ளது. இதோ அன்றைய தினம் பெறப்பட்ட விலைப்பட்டியல்....

 

மதுபானம் கொள்முதல் விலை விற்பனை விலை லாபம்
  • கிங்பிஷர் பீர்
ரூ.56.88 ரூ.120 ரூ.63.12
  • பிரிட்டிஷ் எம்பயர்
  • டூபோர்க்
  • கால்ஸ்பர்க்
ரூ.64.38 ரூ.140 ரூ.75.62
  • கோல்ட்
  • மேக்ஸ் 11000
ரூ.54.37 ரூ.120 ரூ.65.63
  • எம்.சி. விஎஸ்ஓபி
ரூ.62.40 ரூ.130 ரூ.67.760
  • 1848 எக்ஸ்சோ
ரூ.96.05 ரூ.180 ரூ.83.95
  • எம்.ஜி.எம் கோல்டு
ரூ.87.82 ரூ.160 ரூ.72.18
  • ஓல்டுமங்க்
ரூ.53.60 ரூ.100 ரூ.46.40

இன்றும் கொள்முதலில் பெரிய மாற்றமில்லை, ஆனால் விற்பனை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கொள்ளை லாபம் என்று தனியாரை பார்த்து விமர்சிக்கிறோம். உண்மையில் டாஸ்மாக் மதுபான விற்பனையில் தான் கொள்ளை லாபம் நடக்கிறது. அதை அரசே செய்கிறது என்பது தான் கொடுமையான விசயம். 

  • மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு! மது அருந்தி வாகனம் ஓட்டாதீர்! மது உயிரைக் கொல்லும்!