தன் சொந்த வாகனங்களின் எண்ணில் தொடங்கி, விமான டிக்கெட் எண், உயிரிழந்த தேதி என எல்லாவற்றிலும் எண் 12 உடன் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி விசித்திரமான வகையில் தொடர்புகொண்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலாகி வருகின்றன.

Continues below advertisement

அதிர்ச்ச்சியை ஏற்படுத்திய அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத்தில் இருந்து, லண்டன் கிளம்பிய ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர் 787 - 8 ரக விமானம் நேற்று (ஜூன் 12) மதியம் விபத்துக்கு உள்ளானது. விமானத்தின் டேக் ஆஃப்ஃபின்போது ஏற்பட்ட பிரச்சினையில் விமானம் விபத்துக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் விமானம் 825 அடி உயரத்தில் இருக்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விமானம் கீழே பி.ஜே. மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியின் மீது மோதி விழுந்தது. இதனால் பயிற்சி மருத்துவர்கள் சிலரும் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். அவசர கால கதவுக்கு அருகில் இருந்த 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் வெளியே குதித்து உயிர் தப்பினார்.

Continues below advertisement

பாஜக முன்னாள் முதல்வர், விஜய் ரூபானி பலி

இந்த விபத்தில் லண்டனில் உள்ள தனது மகளைப் பார்க்கச் சென்ற பாஜக முன்னாள் முதல்வர், விஜய் ரூபானியும் உயிர் நீத்தார். இதுகுறித்து ஆச்சரியப்படுத்தும் வகையில், தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி, தனது சொந்த வாகனங்களின் எண்ணில் தொடங்கி, விமான இருக்கை எண், உயிரிழந்த தேதி என எல்லாவற்றிலும் எண் 12 உடன் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி விசித்திரமான வகையில் தொடர்புகொண்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலாகி வருகின்றன.

1206 என்ற எண்ணுக்கும் அவருக்குமான தொடர்பு

அவர் முதன்முதலில் வாங்கிய வாகனத்தின் நம்பர் பிளேட் எண் 1206 என்பதால் அதே எண்களிலேயே அடுத்தடுத்த வாகனங்களை வாங்கி உள்ளார். இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் 1206 என்ற எண்ணிலேயே உள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நேற்று விமான நிலையத்துக்கும் 1206 என்ற நம்பர் பிளேட் எண் கொண்ட வாகனத்திலேயே அவர் பயணித்துள்ளார். அவருக்கான போர்டிங் நேரமும் 12.10 ஆகும். டிக்கெட் எண்ணும் 12 ஆகும்.

1206 என்ற எண்களின் கூட்டுத் தொகை 9. அவர் பயணித்த விமானம்  AI 171. இதன் கூட்டுத் தொகையும் 9.

நேற்றைய தேதியும் 12.06 (ஜூன் 12) என்பதால், முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கும் 12 என்ற எண்ணுக்கும் மர்மமான முறையில் தொடர்பு இருப்பதாக பதிவுகள் வைரலாகி வருகின்றன.

வாகனங்களின் எண்- 12.06

விமான போர்டிங் நேரம்- 12.10

விமான இருக்கை எண்- 12

இறந்த தேதி- 12.06

முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி தனது ராசி எண்ணான 12 என்ற தேதியிலேயே உயிரிழந்துவிட்டார் என பாஜக தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.