Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (14.06.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி
 
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின் தடை செய்யப்படுவது வாடிக்கை. மதுரை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். இந்நிலையில் மதுரை மின்வாரியம் சார்பாக நாளை மின் தடை செய்யப்படுவது.
 
மதுரை மாநகர் பகுதிகள்
 
எல்லீஸ் நகர் மெயின் ரோடு, டி,என், எச்.பி., மற்றும் டி.என்.எஸ். சி.பி., அபார்ட்மென்ட் கள் (ஏ முதல் எச் வரை), போடி லைன், கென் னட் ரோடு, மஹபூப்பா ளையம், அன்சாரி நகர் 1 முதல் 7தெரு வரை, டி.பி., ரோடு, ரயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், எஸ்.டி.சி.ரோடு முழுவதும், பைபாஸ் ரோடு, பழங்காநத்தம், சுப்பிரமணியபு ரம் (ரவுண்டானா), வசந்த நகர், ஆண்டாள் புரம், அக்ரிணி, வசுதரா அபார்ட்மென்ட்கள், பெரியார் பேருந்து நிலையம், ஆர்.எம்.எஸ்., ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை, 70 அடி ரோடு, எல்லீஸ் நகர், தாமஸ் காலனி, பாரதியார் 1 முதல் 5 தெருக்கள், சாலைமுத்து நகர், போடி லைன், எஸ்.பி.ஐ., காலனி 1, 2ம்காலனி, பொற்குடம், சத்தியமூர்த்தி நகர், அரசு போக்குவரத்துக் கழகம், அருண்நகர்.
 
மேலூர் பகுதிகள் 
 
மேலுார், தெற்கு தெரு, டி.வல்லாளபட்டி, பெரிய, சின்ன சூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிபட்டி, திருவாதவூர், பதினெட்டாங்குடி, பனங்காடி.