சென்னையில் கொட்டிவாக்கம், கிரீன்வேஸ் சாலை, கோவலன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுக்கழிப்பறைகள் நல்ல பராமரிப்புடன் தூய்மையாக உள்ளன என மக்கள் தெரிவித்துள்ளனர். 


நகரத்தில் சுத்தமான கழிப்பறையை காண்பது என்பது அரிதான காட்சியாக இருக்கலாம், ஆனால் இந்த ஒன்பது சுற்றுப்புறங்களில் உள்ள கழிப்பறைகள் கடந்த ஜூலை மாதம் ஒரு தனியார் நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட பிறகு, குடியிருப்பாளர்கள் தூய்மையான கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கான சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்.


 கிண்டி தொழிற்பேட்டை, திருவான்மியூர் பேருந்து நிலையம், கொட்டிவாக்கம் பேருந்து நிலையம், வேளச்சேரியில் உள்ள மருதுபாண்டி சாலை, அடையாறில் உள்ள பலராமன் தெரு, திருவீதியம்மன் கோயில் தெரு, கிரீன்வேஸ் சாலை, கோவலன் நகர், பெருங்குடியில் உள்ள அண்ணா நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கழிப்பறைகள் கடந்த ஜூலை மாதம் புதுப்பிக்கப்பட்டது.  இந்தியன் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹியூமன் செட்டில்மென்ட்ஸ், தமிழ்நாட்டின் நகர்ப்புற துப்புரவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கழிப்பறைகள் புதுப்பிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 904 கழிப்பறைகளில், 317 சமீபத்தில் கட்டப்பட்டது.


சுயஉதவி குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கழிப்பறை பராமரிப்பு பணிகள் ஒதுக்கப்பட்ட பிறகு, அனைத்து கழிப்பறைகளிலும் தினசரி மக்கள் வருகை 200ல் இருந்து 800-ஆக அதிகரித்துள்ளதாக IIHS-TNUSSP மூத்த நிபுணர் டொனாட்டா விளக்கியுள்ளார்


 "கழிவறைகள் சுத்தமாக இருப்பது மட்டுமின்றி, அதில் 24 மணிநேரமும் தண்ணீர் வசதி உள்ளது மேலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கழிவறை குறித்த கருத்துகள் தொடர்ந்து பதிவு செய்யப்படுகின்றன. நான்கு கழிவறைகள்  24 மணி நேரமும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்திருக்கும்" என டொனாட்டா கூறினார்.


இதை பற்றி கொட்டிவாக்கம் பேருந்து நிலையம் அருகே வசிக்கும் வீட்டுப் பணிப்பெண்ணான எம் ராதாவும், அவரது எட்டு வயது மகளும் ”இதுபோன்ற நவீன கழிவறை அமைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது” என கூறினர். அதேபோல் திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பாதுகாப்புப் பணியாளர் சத்யா கூறுகையில், “சுத்தமான கழிவறை வசதி கிடைத்ததால் நிம்மதியாக உள்ளது” என குறிப்பிட்டார்.


 கழிவு மேலாண்மை சேவை தொழில்முனைவோரான திருமலை, நான்கு கழிவறை வளாகங்களின் பராமரிப்பை மேற்கொண்டுள்ளார். மேலும் கழிப்பறை இருக்கைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாத பராமரிப்பு செலவு ரூபாய் 40,000-80,000 ஆக உள்ளது என தெரிவித்துள்ளார். ஷிப்டுகளில் ஒரு மேற்பார்வையாளர் மற்றும் இரண்டு துப்புரவு பணியாளர்களின் ஊதியத்திற்கு பெரும்பாலான நிதி செல்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.


Label Curd as Dahi: தமிழ்நாட்டில் தயிருக்கு நஹியா? தாஹியை தயார் படுத்தும் FSSAI: இந்தி திணிப்புக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!