கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பிள்ளாபாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 8 மயில்கள் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிள்ளாபாளையம் பகுதியில் மாரியாயி என்பவரின் 1.5 ஏக்கர் விவசாய நிலத்தில் மகிளிப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் (40) என்பவர் 5 வருடங்களாக குத்தகைக்கு  விவசாயம் செய்து வருகின்றார்.




தற்போது நிலத்தில் விளைவித்த பீர்க்கங்காய் செடிகளுக்கு பூச்சி கொல்லி மருந்து அடித்ததாக தெரிகிறது.  அதன் பிறகு வீட்டிற்குச் சென்ற முருகானந்தம் மீண்டும் வயலில் வந்து பார்த்தபோது மயில்கள் இறந்து கிடப்பதை பார்த்துள்ளார். இதனையடுத்து விஏஓ விற்கு தகவல் அளித்துள்ளார்.  


அதன் பிறகு தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வனவர் சாமியப்பன், வனக்காப்பாளர் சிவரஞ்சனி, லாலாபேட்டை போலீசார் மற்றும் விஏஓ முன்னிலையில் வயல் வெளிகளில் இறந்து கிடந்த 2 ஆண் மயில், 6 பெண் மயில்களை மீட்டு கள்ளப்பள்ளி கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். மேலும் இது குறித்து விவசாயி முருகானந்தத்தை வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.


நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்.


நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது என, கரூர்  பண்டிதக்காரன் புதூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில். பண்டிதகாரன் புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி நாளை மறுநாள் 
நடக்கிறது. இதில் நாட்டு கோழி இனங்கள், வளர்ப்பு முறைகள், தீவனம், குடிநீர் பராமரிப்பு, நாட்டுக்கோழிகளை தாக்கும் நோய்கள், மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் மூலிகை மருத்துவ முறைகள், விற்பனை உத்திகள், பண்ணை பொருளாதாரம், ஆகிய தலைப்புகளில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
 பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் பயிற்சி நடக்கும்.  காலை 10 மணிக்கு நேரடியாக பங்கேற்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


சாலை சேதமடைந்ததால் விவசாயிகள் பாதிப்பு.


லாலாபேட்டை அருகே பில்லா பாளையம், மங்கம்மாள் சாலை, பல இடங்களில் ஜல்லிக்கட்டு மிகவும் மோசமாக இருப்பதால் கிராம மக்கள், விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணராயபுரம் அருகே பில்லா பாளையம், கிராமத்தில் இருந்து மகிழப்பட்டி வரை, மங்கம்மாள் சாலை, செல்கிறது. இந்த சாலை வழியாக விவசாயிகள் விளைநிலங்களில் இருந்து, விலைப் பொருட்களான காய்கறிகள் வாழை, வெற்றிலை,  வாகனங்களில் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் மங்கம்மாள் சாலை, பல இடங்களில் ஜல்லிக்கட்டு மிகவும் மோசமாக உள்ளது. இதனால், அந்த வழியாக விவசாயிகள் விலை பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் தினமும் அப்பகுதி மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பில்லா பாளையம், மங்கம்மாள், சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.