விழுப்புரம்: விவசாய நிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்தால் கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி கூறியதாவது :-


விழுப்புரம் மாவட்டத்தில், காப்பு காடுகள் மற்றும் காப்பு நிலங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள நிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி மற்றும் கம்பி வேலிகள் அமைப்பதால் வன விலங்குகள், மனித உயிரிழப்பு ஏற்படுகிறது. விவசாயிகள் தங்களின் நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களை வன விலங்குகள் சேதப்படுத்துவதை தடுப்பதற்காக சமீப காலங்களில் மின்வேலி அமைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் யானைகள் உயிரிழப்பு ஏற்படுகிறது.


மின்வேலி அமைத்தல் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 மற்றும் தமிழ்நாடு மின்சார சட்டம் 2003 பிரிவு 138 ன்படி மிகக் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மின்வேலி அமைக்கக்கூடாது என கடுமையாக எச்சரிக்கப்படுகிறார்கள். இந்த எச்சரிக்கை யை மீறி மின்வேலி அமைத்தால் அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் சம்மந்தப்பட்ட நபரே பொறுப்பேற்க நேரிடும். மேலும், மின்வாரிய மற்றும் வன அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் போது மின்வேலி அமைத்திருப்பது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி கடுமையான குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள் மின்வேலி அமைப்பதை தவிர்த்து மற்ற உயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு தகுந்த ஒத்துழைப்பை நல்கவேண்டும் என கூறினார்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.