அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் 25 -ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வின் மூலம் 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தமிழ் பாடப்பிரிவில் 394 பேரும், ஆங்கில பாடப்பிரிவில் 252 பேரும், கணிதத்தில் 233 பேரும், இயற்பியல் பாடப்பிரிவில் 292 பேரும் என மொத்தம் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் வட்டார வள மைய கருத்தாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்த நிலையில் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்ட அறிவிப்பில், “2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் தேர்வு வரும் ஜனவரி 7- ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை எழுத 41 ஆயிரத்து 478 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் இன்று டிசம்பர் 12-ஆம் தேதி முதல் அவர்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் வகையில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனவரி 7ஆம் தேதி நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மழை வெள்ள பாதிப்பு காரணமாக தேர்வுக்கு தயாராவதில் சிரமம் இருப்பதாக கோரிக்கை எழுந்த நிலையில் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Actor Suriya: டி10 கிரிக்கெட்டில் சென்னை அணியின் உரிமையாளரான நடிகர் சூர்யா; ரசிகர்கள் மகிழ்ச்சி
பெருமாள் வரும் பாதை! பப்ளிக் டாய்லெட்டா இருக்கு! - நக்கலாக கலெக்டரை மிரட்டிய நிர்மலா சீதாராமன்