இந்திய அரசின் 'உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகைத் திட்டத்தில்' (PLI) 'ஆச்சி'யின் பங்களிப்பு பற்றி, 'ஆச்சி' உணவுக் குழுமத்தின் தலைவர் ஏ.டி.பத்மசிங் ஐசக் கூறுகையில், "உணவுப் பொருட்கள் உற்பத்தித் துறையில் கால்பதித்த கால்நூற்றாண்டுகளில் இந்தியா முழுவதிலும் கால்படாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வியக்கத்தகுந்த வளர்ச்சியினை ஆச்சி உணவுக் குழுமம் பெற்றிருக்கிறது.
65 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு, சர்வதேச சந்தையிலும் தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது. 220 வகையான தரம் நிறைந்த உணவுப் பொருட்களை தயார் செய்து, 15 லட்சம் சிறுகடைகள் வழியாக, கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் கைகளுக்கு எட்டும் தூரத்தில், 'ஆச்சி' கொண்டு போய் சேர்க்கிறது.
'ஆச்சி' நிறுவனத்திற்கு கிடைத்த அங்கீகாரம்:
உள்நாட்டில் உற்பத்தித் திறனை உயர்த்தவும், ஏற்றுமதியைப் பெருக்கவும், வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும், 'உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகைத் திட்டத்தை' (Production Linked Incentive scheme) மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது.
இந்தியாவில் 14 துறைகளை சேர்ந்த தலைசிறந்த நிறுவனங்களை தேர்வு செய்து, அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்கள். அதில் முக்கியத்துவம் வாய்ந்த உணவுப்பதப்படுத்தும் துறையில் ஆச்சி உணவுக் குழுமத்தை தேர்வு செய்தது, மகிழ்ச்சியான செய்தியாகும். மத்திய அரசின் இந்த அற்புதமான திட்டத்தில் 'ஆச்சி'யும் இடம்பெற்றதை மிகச்சிறந்த பெருமையாகவும், அங்கீகாரமாகவும் ஏற்றுக்கொள்கிறோம்.
இந்த வாய்ப்பினை அளித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்துக்கும், திட்ட மேலாண்மை நிறுவனத்திற்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். நல்லமுறையில் வழிகாட்டுதல்களை வழங்கி, ஒத்துழைப்பு நல்கும் தமிழக அரசுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த திட்டத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் ஆச்சியின் செயல் இயக்குனர்கள் அஸ்வின்பாண்டியன், அபிஷேக்ஆப்ரஹாம் மற்றும் எங்கள் அனைத்து பணியாளர்களையும் மனதார பாராட்டுகிறேன்.
PLI' திட்டத்தில் 84.66 கோடி ரூபாய் முதலீடு:
'கோவிட்-19'க்கு பிந்தைய காலகட்டத்தில், இந்திய தொழிற்துறை பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்திய பொருளாதாரமும் நெருக்கடிக்குள்ளானது. அந்த காலகட்டத்தில் தொலைநோக்குப்பார்வை கொண்ட 'PLI' திட்டத்தை இந்திய அரசு வகுத்தளித்தது. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டு வர அந்த திட்டம் நல்வழிகாட்டியதோடு, எங்களைப் போன்ற உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய ஊக்கத்தினை தந்தது.
'PLI' திட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு அற்புதமானது. நாங்கள் கூடுதலாக பெருமளவு பணத்தை முதலீடு செய்து, உற்பத்தியை கணிசமாக உயர்த்திக்காட்டவேண்டும். எந்த அளவுக்கு நாங்கள் உற்பத்தியை பெருக்குகிறோமோ அந்த அளவுக்கு, எங்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை (Incentive) வழங்கும்.
நாங்கள் இந்த திட்டத்தில் இணைந்ததில் இருந்து ஆண்டுக்கு ஆண்டு உற்பத்தியை பெருக்கி, அதிகமான ஊக்கத்தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற்றுவருகிறோம். சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த திட்டத்திற்கான விழாவில் தான் பிரதமர் மோடி வருகிற 19-ந்தேதி (வியாழக்கிழமை) காணொளி வாயிலாக கலந்துகொள்கிறார்.
அதில் ஆச்சி நிறுவனமும் பெருமையுடன் பங்கேற்கிறது. எங்கள் உற்பத்தித் திறன் அதிகரித்திருப்பதை விழாவில் உவகையுடன் எடுத்துக்காட்ட இருக்கிறோம். 'PLI' திட்டத்தில் 'ஆச்சி' 84.66 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது. அதில் எங்கள் தொழிற்சாலைகளின் உள்கட்டமைப்பினை சுமார் ரூ.45 கோடியில் மேம்படுத்தியுள்ளோம். நவீன இயந்திரங்களின் பயன்பாட்டு வகையில் ரூ.40 கோடியை முதலீடு செய்துள்ளோம்.
அதன் விவரம்:-
திருவள்ளூர் மாவட்டம் பன்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் எங்கள் தொழிற்சாலையில் ஒரு லட்சத்து பத்தாயிரம் சதுர அடி அளவுக்கு கட்டமைப்பினை உருவாக்கியுள்ளோம். அங்கு அதிநவீனமுறையில் மிக சுகாதாரமாக ஊறுகாய் மற்றும் 'ரெடி டூ குக்' உணவு வகைகள் தயாராகின்றன. அங்கு ஆண்டுக்கு 3 ஆயிரம் மெட்ரிக் டன்னில் இருந்து, உற்பத்தியை 6 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயர்த்தியிருக்கிறோம். அதாவது உற்பத்தி இருமடங்காக அதிகரித்துள்ளது.
பன்பாக்கத்தில் மேலும் 50 ஆயிரம் சதுர அடியில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, அதிநவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட முறையில் மிளகாய் அரவை செய்கிறோம். அங்கு ஆண்டுக்கு 9 ஆயிரம் மெட்ரிக் டன் மிளகாய் அரைக்கப்படுகிறது.
* திருவள்ளூர் மாவட்டத்தில் மேல்முதலம்பேடு, கும்மிடிப்பூண்டி, அலமாதி, கோலடி ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளையும் மேம்படுத்தியுள்ளோம். அங்கு சுமார் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் ஆண்டுக்கு 11/28, மெட்ரிக் டன் அளவுக்கு மசாலா பொருட்களை அரவை செய்கிறோம். இந்த தொழிற்சாலைகளில் உள்ள அனைத்து துறைகளுமே அதிநவீன கட்டமைப்புகளோடு இயங்குகின்றன.
மேற்கண்ட தகவல்களை தனது உரையில் தெரிவித்துள்ள 'ஆச்சி'யின் தலைவர் ஏ.டி.பத்மசிங் ஐசக், "உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு போன்றவைகளை அதிகரிக்கும் நோக்கில் மிகச்சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தும் 'உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்திற்கு ' (MOFPI) எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
5 டிரில்லியன் டாலர் இலக்கு:
'PLI' திட்டத்தில் இணைந்து நாங்கள் இருமுறை மத்திய அரசிடமிருந்து ஊக்கத்தொகையினை பெற்றிருப்பதை பெருமையாக கருதுகிறோம். இந்த திட்டத்தின் வாயிலாக கடந்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக 420 பேர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளோம்.
அதில் 290 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2023-24 நிதியாண்டில் ஆச்சி உணவுக் குழுமம் 2200 கோடி ரூபாய் விற்பனையை பதிவு செய்திருக்கிறது. 'PLI' தரும் ஊக்கத்தால், அடுத்த நிதியாண்டிற்குள் 3 ஆயிரம் கோடி என்ற விற்பனை இலக்கை எட்டிவிடுவோம். 2025-ம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலர் என்பது நமது பிரதமரின் பொருளாதார இலக்காக இருக்கிறது.
அதற்கான பங்களிப்பை வழங்குவதில் நாங்களும் மகிழ்கிறோம். 'PLI' திட்டத்தினை நாங்கள் வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்து வரும் தமிழக அரசினையும் இந்த நல்லநேரத்தில் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்" என்று நிறைவுசெய்கிறார்.