தவெகவினரை தாக்கிய திமுகவினர் உடனே CALL போட்ட விஜய்”எதுனாலும் நான் பாத்துக்குறேன்” DMK vs TVK Fight
திமுக நிர்வாகிகளால் தாக்கப்பட்ட தவெக நிர்வாகிகளிடம் தவெக தலைவர் விஜய் தொலைபேசி மூலமாக நலம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார். தவெக நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் நடந்தை கேட்டறிந்தார்.
கள்ளகுறிச்சியில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தவெக சார்பில் வைக்கப்பட பேனரை கிழித்த திமுக நிர்வாகிகள் தவெக தொண்டர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தார்
திமுக நிர்வாகிகளால் கொடூரமாக தாக்கப்பட்ட தவெக நிர்வாகிகளை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் தொடர்பாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழர் வெற்றிக்காக தொண்டர்களிடம் போனில் அவர்களின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மேலும் எப்போது எந்த உதவியும் வேண்டுமானாலும் எனக்கு உடனடியாக தொடர்பு கொண்டு கேளுங்கள் எனவும் தமிழக வெற்றிக்காகத்தின் தலைவர் விஜய் சிகிச்சை பெற்று வரும் தொண்டர்களிடம் கூறியுள்ளார்.